குழந்தை பிறந்தவுடன் நாம முதலில் வாங்க வேண்டியது பிறப்பு சான்றிதழ் தான். இந்த பிறந்த சான்றிதழ் இல்லாமல் குழந்தைக்கு புதியதாக ஆதார் அட்டை கூட வாங்க முடியாது. ஆதார் இல்லாமல் எந்த ஒரு அரசு சான்றிதழும் வாங்க முடியாது. ஆகையால் நாம் பிறப்பு சான்றிதழ் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.
சரி! இப்போது நாம் ஆன்லைனில் எப்படி பிறப்பு சான்றிதழ் வாங்குவது பற்றி பாப்போம்!
உங்கள் குழந்தை சென்னை மாநகரத்திற்குள் பிறந்து இருந்தால் கீழே உள்ள "Download Birth Certificate" என்ற பட்டனைக் கிளிக் செய்து இந்த வலைதளத்திற்குள் செல்ல வேண்டும்.
குழந்தையின் பிறந்த தேதி, பாலினம், பிறந்த மருத்துவமனை இவற்றை கொடுக்க வேண்டும். பின் அருகில் இருக்கும் நம்பரை கொடுத்து விட்டு submit செய்தால் போதும். அந்த தேதியில் பிறந்த குழந்தையின் விவரங்கள் அனைத்தும் வரும். அதில் உங்கள் குழந்தையின் பெயருக்கு நேராக இருக்கும் பிரின்ட் பட்டனை கிளிக் செய்ங்க அவ்வளவு தான் உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் டவுன்லோட் ஆகி விடும்.
Download Birth Certificate
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment