சென்னையில் இறந்தவர்களுக்கான இறப்புச்சான்றிதழ் ஆன்லைனில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் ! | Death Certificate Download | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, November 1, 2023

சென்னையில் இறந்தவர்களுக்கான இறப்புச்சான்றிதழ் ஆன்லைனில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் ! | Death Certificate Download | Techinfo



ஒரு மனிதனின் பிறந்ததற்கு  பிறப்புச்சான்றிதழ் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி இறந்துவிட்டால் இறப்புச்சான்றிதழ்  என்பதும் முக்கியமாக ஆவணமாக உள்ளது. ஒருவர் இறந்தபின் வாரிசு சான்றிதழ், ரேஷன்கார்டில் பெயர் நீக்கம் போன்ற அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கு இறப்புச்சான்றிதழ் என்பது மிக முக்கியமாகிறது. இனி அந்த இறப்புச்சான்றிதழை ஆன்லைனிலே டவுன்லோட் செய்துகொள்ளலாம்! இந்த பதிவில்  சென்னை  நகரத்தில் இறந்தவர்களுக்கான சான்றிதழை மட்டுமே பதிவிறக்க முடியும். 

  • கீழே உள்ள 'Download Death Certificate" என்ற லிங்கில் உள் செல்லவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் இறந்தவரின் இறந்த தேதி கேட்கும் .அதை டைப் செய்யவேண்டும். 
  • அடுத்து இறந்தவரின் பாலினத்தை select பண்ணவேண்டும் .
  • பிறகு Number Verificationனிற்கு அருகில்  இருக்கும் நம்பரை  கட்டத்தில்   டைப் பண்ணவேண்டும் .
  • கீழே உள்ள  submit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
  • இப்போது நீங்கள் கொடுத்த தேதியில் இறந்தவர்களின் பெயர் பட்டியல் காண்பிக்கும்.
  • இதில் உங்களுக்கு யாருடைய சான்றிதழ் வேண்டுமோ  அவர்களுடைய பெயர் , பாலினம், அப்பா பெயர் , இறந்த தேதி  எல்லாம் சரியாக உள்ளதா என check செய்து கொள்ளவும்.
  • Check செய்த பின் Print என்ற பட்டனைக் கிளிக் செய்தால் இறப்புச்சான்றிதழ் டவுன்லோட் ஆகிவிடும்.

Download death certificate

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..






No comments:

Post a Comment