உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? அல்லது ஸ்மார்ட் கார்டு ஏதேனும் திருத்தம் செய்தீர்களா? இப்போது திருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு அல்லது நீங்கள் தொலைத்துவிட்ட ஸ்மார்ட் கார்டு பெற தாலுகா அலுவலகம் செல்லத் தேவையில்லை உங்களுடைய வீடு தேடி வரும்.
இவ்வாறு உங்களுடைய குடும்ப அட்டை நகல் உங்களுடைய வீட்டிற்கே வருமாறு இணையத்தில் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தினால் போதும் ஸ்மார்ட் கார்டு தபால் மூலம் வீட்டிற்கே வந்து விடும்.
இணைய வழி அட்டை கட்டணம் ரூ.20 மற்றும் தபால் கட்டணம் ரூ.25 என மொத்தம் ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டிற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை பாப்போம் !
- கீழே உள்ள "Duplicate Smart Card Apply" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் ஸ்மார்ட் கார்டு உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு கீழே உள்ள Captcha வை அருகில் உள்ள கட்டத்தில் டைப் செய்து Send OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து "login/ உள்நுழைய" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து வரும் pageஇல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கவனமாக படித்து விட்டு "பணம் செலுத்து" என்ற பட்டனைக் கிளிக் செய்து ரூ.45 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
- அடுத்து "நகல் அட்டை விண்ணப்பிக்க" என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் நகல் அட்டை பெறுவதற்கான காரணத்தை டைப் செய்து பணம் செலுத்திய Transaction Details யை கொடுத்து Submit செய்யவும்.
- இனி ஸ்மார்ட் கார்டு உங்கள் வீட்டிற்கே தபால் மூலம் வரும்.
Duplicate Smart Card Apply
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment