இன்றைக்கு சாதி சான்றிதழ் , வருமானச் சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ் , முதல் பட்டதாரிச் சான்றிதழ் போன்ற அனைத்து வகையான சான்றிதழ்களும் இ-சேவை மையம் மூலமாகவே விண்ணப்பம் செய்து கொள்கிறோம். அவ்வாறு விண்ணப்பம் செய்த பின் நம்மிடம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை தருவார்கள். அதில் நம்முடைய விண்ணப்ப எண் அதாவது Acknowledgment Number இருக்கும். அந்த நம்பரை வைத்து நம்முடைய விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு அறிந்து கொள்ளவது ? விண்ணப்பித்த சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் ? ஒருவேளை அந்த ஒப்புகைச் சீட்டு தொலைந்துவிட்டால் எவ்வாறு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது ? அல்லது உங்களிடம் உள்ள சான்றிதழ் தொலைத்துவிட்டால் எவ்வாறு மீண்டும் பதிவிறக்கம் செய்வது ?போன்றவற்றை இந்த பதிவில் பார்க்கலாம் !
1.விண்ணப்பத்தின் நிலை அறிய
- https://bit.ly/allgovtcertificates - என்ற website லிங்கில் செல்லவும் .
- ஓபன் ஆகக்கூடிய pageல் வலது பக்க மூலையில் Acknowledgement No என்ற ஒரு கட்டம் இருக்கும்.
- அதில் உங்களிடம் ஒப்புகைச் சீட்டில் உள்ள நம்பரை டைப் செய்து Search icon னை கிளிக் செய்யவும் .
- கீழே உங்களுடைய விண்ணப்பத்தின் நிலை பற்றிய விவரங்கள் காண்பிக்கும்.
குறிப்பு - இந்த முறையை பயன்படுத்தும் போது உங்களுடைய விண்ணப்பம் Resubmit வந்திருந்தால் இதில் காண்பிக்காது . அப்போது நீங்கள் விண்ணப்பித்த இ சேவை மையத்தை அணுகவும் .
2.விண்ணப்பம் பதிவிறக்கம்
- அதில் Status என்ற பகுதியில் Application Approved என இருந்தால் கீழே Download Certificate என்ற optionயை கிளிக் செய்து உங்களுடைய சான்றிதழைப் பதிவிறக்கிக் கொள்ளவும் .
- ஒருவேளை கீழே Download Certificate என்ற option வரவில்லை எனில் மேலே Dashboard இல் Verify Certificate என்ற option இருக்கும்.அதை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது தெரியக்கூடிய Certificate number என்ற கட்டத்தில் உங்களிடம் ஒப்புகைச் சீட்டில் உள்ள நம்பரை டைப் பண்ணவும் .
- அடுத்து Enter Captcha என்ற இடத்தில் திரையில் தெரியக்கூடிய Captcha வை சரியாக டைப் செய்து search என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- மீண்டும் கீழே உங்களுடைய விண்ணப்பத்தின் நிலை பற்றிய விவரங்கள் காண்பிக்கும்.
- அதில் Status என்ற பகுதியில் Application Approved என இருந்தால் கீழே Download Certificate என்ற optionயை கிளிக் செய்து உங்களுடைய சான்றிதழைப் பதிவிறக்கிக் கொள்ளவும் .
- இதிலும் சான்றிதழ் பதிவிறக்க முடியவில்லை எனில் மீண்டும் Verify Certificate என்ற optionஇல் செல்லவும் .
- அதில் Captchaவிற்கு கீழே Click Here to Download Certificate என்ற option இருக்கும் .அதை கிளிக் செய்து உள்ளே செல்லவும் .
- அதில் மீண்டும் Certificate number என்ற கட்டத்தில் உங்களிடம் ஒப்புகைச் சீட்டில் உள்ள நம்பரை டைப் பண்ணவும் .
- அடுத்து Enter Captcha என்ற இடத்தில் திரையில் தெரியக்கூடிய Captcha வை சரியாக டைப் செய்து search என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்போது Download Certificate என்ற option காண்பிக்கும் .அதை கிளிக் செய்து உங்களுடைய சான்றிதழைப் பதிவிறக்கிக் கொள்ளவும் .
3 .சான்றிதழ் தொலைந்துவிட்டால் / ஒப்புகைச் சீட்டு தொலைந்துவிட்டால்
- https://bit.ly/misscertificate - இந்த websiteஇல் செல்லவும் .
- ஓபன் ஆகக்கூடிய page இல் Enter Aadhar என்ற கட்டத்தில் உங்களுடைய ஆதார் எண்ணை டைப் செய்யவும் .
- அடுத்து Enter Captcha என்ற இடத்தில் திரையில் தெரியக்கூடிய Captcha வை சரியாக டைப் செய்யவும் .
- கீழே இருக்கக்கூடிய இரண்டு கட்டங்களையும் select செய்து Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும்.
- அந்த OTP யை enter செய்து Submit செய்யவும் .
- திரையில் Tamilnadu Government Certificates என்ற கட்டம் இருக்கும் .
- அதில் Add New என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்போது select e-sevai certificate என்ற option னில் நிறைய சான்றிதழ்கள் இருக்கும் .
- அதில் நீங்கள் தொலைத்த சான்றிதழை / நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழை select செய்து Submit செய்தால் உங்களுடைய சான்றிதழ் வந்துவிடும் .
- அதை டவுன்லோட் செய்து print எடுத்துகொள்ளவும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment