EC எனப்படும் வில்லங்கச் சான்றிதழ் என்பது சொத்து வாங்கும் நபர்கள் அந்த சொத்தின் முந்தைய உரிமையாளர்களின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது . மேலும் அதில் ஏதும் வில்லங்கம் உள்ளதா என்பதையும் இந்த சான்றிதழ் மூலம் அறிந்துகொள்ளலாம். இவற்றை வீட்டில் இருந்தே நாம் இணைய வழியில் மூலமாகவே பதிவிறக்கி பார்த்துக்கொள்ளும் வசதியை பத்திரப் பதிவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.எனவே பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலகதிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எவ்வாறு ஆன்லைனில் வில்லங்கச் சான்றிதழை டவுன்லோட் செய்யலாம் என்பதை பாப்போம்!
- கீழே உள்ள "வில்லங்கச் சான்று"என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உள்ளே சென்றவுடன் முகப்பு பக்கத்தில் உள்ள " மின்னணு சேவைகள்" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அதில் "வில்லங்கச் சான்று " என்ற Option னைக் கிளிக் செய்யவும். அதில் "வில்லங்கச் சான்று விவரம் பார்வையிடுதல்"என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில் மண்டலம்,மாவட்டம்,சார்பதிவாளர் அலுவலகம், கிராமம், சர்வே எண் / புல எண் , உட் பிரிவு எண்/ Sub Division Number மற்றும் உங்களுக்கு எந்த வருடம் முதல் எந்த வருடம் வரை சான்று வேண்டும் போன்ற விவரங்களை சரியாக டைப் செய்யவும்.
- எல்லாவற்றையும் உள்ளீடு செய்த பின் " சேர்க்க" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- பின் கீழே காண்பிக்கப்படும் CAPTCHA வை அருகில் உள்ள கட்டத்தில் சரியாக டைப் செய்து "தேடுக" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் சொத்தை பற்றிய விவரங்கள் அடங்கிய வில்லங்கச் சான்று திரையில் தோன்றும். அதை பிரிண்ட் எடுத்து சரி பார்த்துக்கொள்ளலாம்.
வில்லங்கச் சான்று
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment