வாட்சாப் நிறுவனம் தனது ஆப்பில் பல்வேறு புதுப்பித்தல்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. உலகளவில் பெரும்பான்மையோர் பயன்படுத்து சாட் ஆப் என்றால் அது வாட்சாப் தான் ! டெலிகிராம் போன்ற பல்வேறு ஆப் இருந்தாலும் வாட்சாப்பில் உள்ள Privacy வசதி இது போன்ற ஆப் -களில் இருப்பதில்லை. தொடர்ந்து வாட்சாப் தனது பயனாளிகளின் பாதுகாப்பை வலுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி குறிப்பிட்ட சாட்களை மட்டும் லாக் செய்யும் வசதியை வாட்சாப் நிறுவனம் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது சீக்ரெட் code என்ற புது Updateடை டெஸ்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சீக்ரெட் code மூலம் தங்களது சாட்களை privacy password மூலம் பாதுகாக்கமுடியும் என கூறப்படுகிறது
சீக்ரெட் code பயன்பாட்டு முறை -
- நாம் எந்த சாட்டை லாக் செய்ய வேண்டுமோ அதை select செய்து கொள்ளவும்.
- பின் சீக்ரெட் code என்ற optionனில் சென்று உங்களுடைய passwordடை டைப் செய்து லாக் செய்துவிடலாம்.
- இப்போது வாட்சாப்பின் search box இல் நம்முடைய paaswordடை போட்டு search செய்தால் போதும் நாம் லாக் செய்து வைத்த சாட்களை ஓபன் செய்து பார்க்க இயலும்.
தற்போது உள்ள வசதியின் படி மொத்த சாட்களுக்கும் ஒரே password தான் போட்டுக்கொள்ள முடியும் ஆனால் இந்த சீக்ரெட் code மூலம் ஒவ்வொரு சாட்களுக்கும் தனித்தனி passwordடை செட் செய்து கொள்ளலாம் .ஆனால் இந்த சீக்ரெட் code என்ற வசதி நடைமுறைக்கு வரவில்லை. இந்த புதிய வசதி மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் எப்போது நடைமுறையில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment