ஆதார் அட்டை என்பது நாம் இந்தியக் குடிமகன் என்பதற்கான அடையாளம். ஒரு சில பேர் நீண்ட காலமாகவே ஒரே முகவரி மற்றும் ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்திக்கொண்டிருப்பர். அவர்கள் இதுவரை தங்களுடைய ஆதார் அட்டையில் எந்தவிதமான திருத்தமோ அல்லது அப்டேஷனோ செய்யாமல் பழைய ஆதார் அட்டையை வைத்திருப்பார்கள். இதுபோன்று 10 வருடங்களுக்கு மேல் பழைய ஆதார் அட்டை வைத்திருப்போர் அவர்களுடைய ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என UIDHAI தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்தவிதமான கட்டணமும் இல்லாமலே எளிமையாக இந்த ஆதார் புதுப்பித்தலை செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது . ஆனால் 2023 டிசம்பர் 14 வரை மட்டுமே இந்த இலவச புதுப்பித்தலை செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இப்போது UIDHAI தரப்பில் Update செய்து கொள்ளும் தேதியை மீண்டும் நீடித்துள்ளது. 14 மார்ச் 2024 வரை இலவசமாக ஆதார் Update செய்துகொள்ளலாம் என அறிவித்தது.தற்போது இந்த சேவையை ஜூன் 14 வரை இலவசமாக பெற்றுகொள்ளலாம். அதாவது இனி எவ்வாறு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்!
- கீழே உள்ள Aadhaar Update என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகக்கூடிய பேஜ்ல் login என்ற பட்டனை கிளிக் செய்து உள் செல்லவும்.
- இப்போது திரையில் தெரியக்கூடிய முதல் கட்டத்தில் உங்களுடைய ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
- அடுத்து கீழே உள்ளன் Captchaவை சரியாக டைப் செய்து Send OTP யை கிளிக் செய்யவும்.
- ஆதாருடன் link செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை உள்ளீடு செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உள் சென்றவுடன் முதலில் உள்ள Document Update என்ற கட்டத்தை கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் முதல் பக்கத்தில் இந்த ஆதார் புதுப்பித்தல் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.அதாவது இந்த அப்டேஷனில் உங்களுடைய விவரங்களை திருத்தம் செய்ய இயலாது மாறாக அப்டேட் மட்டும் செய்துகொள்ளலாம். நீங்கள் பிறந்த தேதி, முகவரி போன்றவைகள் திருத்தம் செய்யவேண்டுமானால் அதற்கு தனியாக ரூ.50 செலுத்தி அப்டேட் செய்துகொள்ளலாம்.
- கீழே உள்ள Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து வரக்கூடிய பேஜ்ல் உள்ள Next என்ற பட்டனையும் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய ஆதாரில் உள்ள விவரங்கள் காண்பிக்கும் அவை எல்லாம் சரியாக உள்ளதா என check செய்து கொள்ளவும்.
- அதில் எதாவது திருத்தம் செய்துகொள்ள வேண்டியது இருந்தால் அதற்கு தனியாக ரூ.50 செலுத்தி அப்டேட் செய்துகொள்ளலாம்.
- விவரங்களை சரி பார்த்த பின் கீழே உள்ள " I Verify that the above details are Correct" என்ற பட்டனை கிளிக் செய்து Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- அடுத்து Document Upload செய்யக்கூடிய பக்கத்திற்கு செல்வீர்கள்.
- அதில் முதலில் 'Proof Of Identity' என்ற கட்டத்தை கிளிக் செய்து அங்கு காண்பிக்கப்பட்ட ஏதாவது ஒரு Documentயை நீங்கள் upload செய்யவும்.
- அடுத்து " Proof Of Address " என்ற கட்டத்தை கிளிக் செய்து அங்கு காண்பிக்கப்பட்ட ஏதாவது ஒரு Documentயை நீங்கள் upload செய்யவும்.
- Document upload முடிந்த பின் கீழே உள்ள Tick boxயை கிளிக் செய்து Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய விவரங்கள் Preview காண்பிக்கும்.
- அதை Check செய்து விட்டு submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்
- .Submit செய்த வுடன் உங்களுக்கு ஒரு Acknowledgement நம்பர் வரும் அதை வைத்து status Check செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment