தபால் நிலையங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது.அதில் ஒன்று தான் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம். இந்த மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது பெண்களுக்காகவே அறிமுகப்படுத்தபட்டது.
இந்த திட்டம் பெண் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் திட்டமாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் அல்லது தனிப்பட்ட பெண் நபரின் பெயரில் தொகையை முதலீடு செய்யலாம்.
18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தங்களுடைய பாதுகாவலர் மூலம் இந்த சேமிப்பு கணக்கை திறந்து கொள்ளலாம். மார்ச் 31, 2025 வரை தான் இந்த திட்டம் அமலில் இருக்கும் . அந்த தேதிக்குள் கணக்கை துவங்கி பணம் போடலாம். குறைந்தது ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 2 லட்சம் வரையில் சேமிக்கலாம்.
இதற்கு ஆண்டு வட்டி 74.5% ஆகும். இதன்படி அதிகபட்சம் 2 லட்சம் வரை சேமித்தால் ஒரு ஆண்டிற்கு 16 ஆயிரமும் இரண்டு ஆண்டிற்கு 32 ஆயிரமும் வட்டி கிடக்கும்.
இத்திட்டத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் வட்டிக்கு எந்தவொரு வரிப் பிடித்தமும் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment