PF-ல் பணம் எடுக்க ஈசி வழி! | How to Apply PF withdrawal in Online ? | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, October 10, 2023

PF-ல் பணம் எடுக்க ஈசி வழி! | How to Apply PF withdrawal in Online ? | Techinfo


நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் PF பிடித்தம் செய்கிறார்களா ? இந்த PF பிடித்தம் என்பது அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக அவர்களது சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை ஒவ்வொரு மாதமும் அவர்களது PF கணக்கில் பிடித்தம் செய்யப்படுகிறது.  இவ்வாறு
பிடித்தம் செய்யப்பட்ட  மொத்த பணத்தையும்  அந்த ஊழியர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . உங்களுடைய  வசதிக்கேற்ப  பணம் தேவைப்படும்போதும் எடுத்துகொள்ளலாம். இப்போது PF பணத்தை எடுக்க எவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதை பாப்போம் !

  • கீழே உள்ள PF Withdraw என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • இப்போது ஓபன் ஆகக்கூடிய பேஜ்ல் உங்களுடைய UAN எண் , பாஸ்வேர்ட் யை டைப் செய்யவும்.
  • அருகில் உள்ள Captcha வை சரியாக டைப் செய்யவும்.
  •  பிறகு Online Service-ல் உள்ள Claim என்ற optionனை கிளிக் செய்யவும்.
  • இப்போது ஓபன் ஆகும் பேஜ்ல் உங்கள் UAN எண்ணுடன் link செய்த வங்கி கணக்கை டைப் செய்து Verify என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • இங்கு குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை ஏற்ற பின்பு Proceed For Online Claim என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது நீங்கள் பணத்தை எடுப்பதற்கான காரணத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு உங்களுடைய முகவரி மற்றும் பாஸ்புக் விவரங்களை சரியாக டைப் செய்யவும்.
  • நீங்கள் Advance Claim என்ற optionனை கிளிக் செய்திருந்தால் அருகில் உள்ள Send  OTP என்பதை கிளிக் செய்யவும் . 
  • உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட  மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை டைப் செய்து அங்கு குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை ஏற்று Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடைய Claim ன் நிலையை அறிய அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகலாம்.
  • இருபது நாட்களுக்குள் பணம் வரவில்லை எனில் இணையத்தில் புகாரளிக்கலாம்.

PF Withdraw



                                  

     

No comments:

Post a Comment