உங்களுக்கு 18 வயது நிரம்பிவிட்டதா? வோட்டர் ஐடி ஆன்லைனில் விண்ணபிக்கலாம்! | Voter Id New Registration apply in online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, November 3, 2023

உங்களுக்கு 18 வயது நிரம்பிவிட்டதா? வோட்டர் ஐடி ஆன்லைனில் விண்ணபிக்கலாம்! | Voter Id New Registration apply in online | Techinfo

 வோட்டர் ஐடி என்பது  ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்  வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஜனநாயகத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தேர்தலின் போது வாக்களிப்பது அவர்களின் கடமையாகும். அவ்வாறு அவர்கள்  வாக்களிக்க   இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு தனி நபர்களுக்கும்  வழங்ககூடிய அட்டை தான் வோட்டர் ஐடி. இந்த அட்டையின் முதன்மை நோக்கம் வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மேம்படுத்தவும் தேர்தல் நேரங்களில் நடக்கும் மோசடிகளை தவிர்க்கவும் பயன்படுகிறது. மேலும்  இது  தனி மனித அடையாள அட்டையாகவும் பல இடங்களில் பயன்படுகிறது.

 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் அட்டையாள அட்டை விண்ணபிக்க தகுதியானவர்கள் ஆவார்.இந்த அட்டையை ஆன்லைன் மூலமாக நாமே விண்ணப்பித்துக்கொள்ளலாம்.எவ்வாறு விண்ணபிக்கலாம் என காண்போம்!

தேவையான ஆவணங்கள் :

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை /பிறப்புச்சான்றிதழ்/பான் கார்டு/ரேஷன் கார்டு 

  • கீழே உள்ள "Voter ID New Registration" என்ற லிங்க்கை கிளிக் செய்து உள் செல்லவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுக்கு ஏற்கனவே Account இருந்தால் மேலே உள்ள  Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய Username மற்றும் Password கொடுத்து கீழே உள்ள Captcha வை அருகில் உள்ள  கட்டத்தில்  சரியாக  டைப் செய்யது Request OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • உங்களுக்கு  Account இல்லை என்றால் மேலே உள்ள Sign Up என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு Account create செய்து பின் Login செய்யவும்.
  • இப்போது ஓபன் ஆகும் பேஜ்ல் Form 6 என்ற பகுதியில் உள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடைய மாநிலம், மாவட்டம், தொகுதியை select  செய்து  Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து  உங்களுடைய Personal Details பற்றிய விவரங்கள் கேட்கும். அதில் உங்களுடைய பெயரை  ஆங்கிலம் மற்றும் தமிழில் சரியாக டைப்   பண்ணவும். பின் கீழே  விண்ணப்பதாரரின்  புகைப்படத்தை upload பண்ணவும். புகைப்படம் Jpeg, Jpg format இல் 2 MB க்குள் இருக்க வேண்டும். பின் Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய Relatives இன் வோட்டர் ஐடி details கொடுக்கவும். அதில் நீங்கள் யாருடைய details கொடுக்க போறீர்களோ அவர்கள் உங்களுக்கு என்ன உறவு முறை வேண்டுமோ அதை select செய்து அவர்களுடைய பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய Contact details கொடுக்க வேண்டும். அதில் மொபைல் நும்பரில் Self என்ற option னைக் கிளிக் செய்து உங்களுடைய மொபைல் எண்ணை டைப் செய்து sent OTP என்ற பட்டனைக் கிளிக் செய்து மொபைல் எண்ணிற்கு வரக்கூடிய OTP யை enter செய்யவும். பின் Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய ஆதார் details கொடுக்கவேண்டும். மேலே ஆதார் நம்பர் என்ற optionனைக் கிளிக் செய்து உங்களுடைய ஆதார் எண்ணை டைப் செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய பாலினத்தை select செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய பிறந்த தேதி கேட்கும் அதை select செய்து விட்டு கீழே அதற்கான Document யை select செய்து upload செய்யவும்.பின் next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய முகவரி பற்றிய விவரங்களைக் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்து Address proof ற்காக கீழே கொடுக்கப்பட்ட எதாவது ஒரு Documentயை upload செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவேண்டும்.
  • அடுத்து நீங்கள் மாற்றுதிறனாளி நபராக இருந்தால் உங்களுக்கு என்ன வகையான உடற்குறைபாடு என்பதை இங்கு select செய்து Percentage of Disability மற்றும் மாற்றுதிறன் சான்றிதழ் போன்றவற்றை upload செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இல்லையென்றால்இந்த பகுதியை Skip செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய Family Member இன் வோட்டர் ஐடி விவரங்களை விருப்பபட்டால் கொடுத்து next கொடுக்கவும்.
  • அடுத்து Declaration பகுதியில் நீங்கள் கொடுத்த முகவரியில்  வசிக்கும் கிராமம் ,மாவட்டம்,மாநிலம் , எத்தனை வருடங்களாக இந்த முகவரியில் வசிக்கிறீர்கள் என்பதை டைப் செய்து  கீழே உங்களுடைய  Place யையும் டைப் செய்துவிட்டு next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  •  அடுத்து திரையில் தெரியக்கூடிய Captcha வை கீழே உள்ள கட்டத்தில் சரியாக டைப் செய்து Save என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • பின் Preview  & Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு preview application காண்பிக்கும் அவை எல்லாம் சரியாக உள்ளதா என check செய்து விட்டு ஏதேனும் திருத்தம் இருந்தால் கீழே உள்ள Keep Editing என்ற பட்டனைக் கிளிக் செய்து edit செய்து கொள்ளலாம் எல்லாம் சரியாக இருந்தால் கீழே உள்ள Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.  
  • submit செய்ததும் ஒரு Acknowledgement number வரும் அதை note செய்து கொள்ளவும். அல்லது அருகில் Download Acknowledgement  என்ற பட்டனைக் கிளிக் செய்து Acknowledgement  applicationனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
  • வோட்டர் ஐடி உங்களுக்கு வந்துவிட்டதா என  இந்த Acknowledgement  நம்பர் வைத்து Status செக் செய்துகொள்ளலாம்.

Voter Apply

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..


No comments:

Post a Comment