ஒரு மனிதனின் பிறந்ததற்கு சான்றாக பிறப்புச்சான்றிதழ் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி இறந்துவிட்டால் இறப்புச்சான்றிதழ் என்பதும் முக்கியமாக ஆவணமாக உள்ளது. ஒருவர் இறந்தபின் வாரிசு சான்றிதழ், ரேஷன்கார்டில் பெயர் நீக்கம் போன்ற அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கு இறப்புச்சான்றிதழ் என்பது மிக முக்கியமாகிறது. இனி அந்த இறப்புச்சான்றிதழை ஆன்லைனிலே டவுன்லோட் செய்துகொள்ளலாம்! இந்த பதிவில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டத்தில் இறந்தவர்களுக்கான இறப்புச்சான்றிதழ் மட்டுமே பதிவிறக்கி கொள்ளலாம்.
- கீழே உள்ள Download Death Certificate என்ற லிங்கில் செல்லவும்.
- ஓபன் ஆகும் பேஜ்-இல் பாலினத்தை select பண்ணவேண்டும் .
- அடுத்து எந்த மாவட்டத்தில் இறந்தார்களோ அந்த மாவட்டத்தை select பண்ணவேண்டும் .
- வீட்டில் இறந்தால் home selectபண்ணவேண்டும் .hospital-இல் இறந்தால் hospital name -யை select பண்ணவேண்டும் .
- எந்த தேதியில் இறந்தார்களோ அந்த தேதியை செலக்ட் பண்ணவேண்டும்
- பிறகு உங்க மொபைல் நம்பரை enter செய்து send OTP கொடுக்க வேண்டும்
- பிறகு உங்க மொபைலுக்கு வரும் OTP யை போட்டு பிறகு Number Verification-இல் பக்கத்தில் இருக்கும் பாக்ஸ்ஸில் நம்பரை அப்படியே டைப் பண்ணவேண்டும் . பிறகு view என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் .
- கிளிக் செய்ததும் அந்த தேதியில் இறந்தவர்களின் பெயர்கள் வரும் அவங்களுடைய அப்பா பெயர் ,இறந்தவர்களின் பெயர் ,எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் செய்யவும்.
- பின் Registration Number ரைக் கிளிக் செய்தால் இறப்புச்சான்றிதழ் டவுன்லோட் ஆகிவிடும்.
No comments:
Post a Comment