பொதுவாகவே ஒரு நிலத்தின் விவரங்களைப் பற்றி அறிய பட்டா சிட்டா அதாவது பத்து ஓன்று ஆவணம் பயன்படுகிறது.இந்த பட்டாவில் நிலத்தின் பட்டா எண்,சர்வே நம்பர், உட்பிரிவு எண், நிலம் அமைந்துள்ள கிராமம், மாவட்டம், உரிமையாளரின் பெயர், அவரது தந்தை பெயர் மற்றும் இன்னும் பிற விவரங்கள் வருவாய்துறையினால் வழங்கப் படுகிறது. இந்த பட்டா சிட்டா வை ஆன்லைன் மூலமாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம். எவ்வாறு டவுன்லோட் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
- கீழே உள்ள "பட்டா சிட்டா" என்ற link யை கிளிக் செய்து உள் செல்லவும்.
- இப்போது ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுடைய மாவட்டத்தை select செய்து கிராமப்புறமா அல்லது நகர்ப்புறமா என்பதை select செய்து
- ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுடைய மாவட்டம்,வட்டம்,கிராமம் போன்றவற்றை தேர்வு செய்யவும்.
- பட்டா நம்பர் இருந்தால் பட்டா எண் என்ற optionனைக் கிளிக் செய்து கட்டத்தில் பட்டா எண்ணை கொடுத்து கீழே உள்ள Captcha வை சரியாக டைப் செய்து சமர்ப்பி என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அல்லது சர்வே நம்பர் இருந்தால் புல எண் என்ற optionனைக் கிளிக் செய்து கீழே உள்ள கட்டத்தில் சர்வே நம்பர் மற்றும் உட்பிரிவு எண்ணையும் டைப் செய்து சமர்ப்பி என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் நிலத்தின் பட்டா சிட்டா ஆவணம் வந்துவிடும் அதில் உள்ள விவரங்கள் எல்லாம் சரியாக உள்ளதா என check செய்து விட்டு கீழே உள்ள Print என்ற பட்டனைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
பட்டா சிட்டா
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment