ஆதார் அட்டை என்பது தனி மனித அடையாள அட்டையாகவும் இந்திய குடிமகன் என்பதற்கு அடையாளமாகவும் பயன்படுகிறது. மேலும் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாக உள்ளது. அதை எவ்வாறு ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்!
- கீழே உள்ள Aadhar Card Download என்ற link ல் செல்லவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
- பின் கீழே கட்டத்தில் உள்ள Captcha வை சரியாக டைப் செய்து Send OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அதை Enter செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது Download Aadhar என்ற கட்டத்தை கிளிக் செய்யவும்.
- அடுத்து வரும் பக்கத்தில் வலது பக்க மூலையில் உங்களுடைய புகைப்படம் காண்பிக்கும் அதை கிளிக் செய்து ஆதாரில் உள்ள பெயரின் முதல் நான்கு எழுத்து மற்றும் பிறந்த வருடத்தை note செய்துகொள்ளவும். பின் கீழே உள்ள Download என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய ஆதார் டவுன்லோட் ஆகிவிடும்.
- டவுன்லோட் பண்ணிய file யை Adobe Reader ல் ஓபன் செய்யவும். இப்போது password கேட்கும்.
- நீங்கள் Note செய்த உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்தை Capital எழுத்திலும் பிறந்த வருடத்தையும் டைப் செய்து enter கொடுக்கவும்.
Aadhar Card Download
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment