"தமிழ் வழிக்கல்வி சான்றிதழ்" மொபைலில் விண்ணப்பிக்கலாம்! | PSTM Certificate Apply in mobile | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Saturday, November 25, 2023

"தமிழ் வழிக்கல்வி சான்றிதழ்" மொபைலில் விண்ணப்பிக்கலாம்! | PSTM Certificate Apply in mobile | Techinfo


 அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக  அரசு துறைகள் சார்ந்த பணிகளில் பணியாளர்களை நியமனம் செய்ய  20% தனி இட ஒதுக்கீடு தமிழக அரசால்  வழங்கப்படுகிறது.  சம்பந்தப்பட்ட அரசு பணிகளுக்கான கல்வி தகுதியை ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அவ்வாறு படித்திருந்தால் அதற்கான "தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் " பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழை பெறுவதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தேவையில்லை. அருகில் உள்ள இ-சேவை அல்லது நெட் சென்டர் மூலமாக விண்ணபிக்கலாம். இப்போது அந்த சான்றிதழை எவ்வாறு மொபைல் மூலமாக விண்ணபிக்கலாம் என்பதை பார்க்கலாம்!

  • கீழே உள்ள PSTM என்ற link யை கிளிக் செய்து உள் செல்லவும்.
  • உங்களுக்கு ஏற்கனவே Account இருந்தால் உங்களுடைய Username , Password, Captcha  வை டைப்  login செய்து கொள்ளவும்.
  •  Account இல்லை என்றால் கீழே அருகில் உள்ள sign Up என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,மொபைல் எண், ஆதார் எண், இ-மெயில் ,login id , password , Confirm password மற்றும் Captcha போன்றவற்றை சரியாக டைப் செய்து sign up என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.  இப்போது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை கட்டத்தில் டைப் செய்து Enter என்ற பட்டனைக் கிளிக் Account create ஆகி விடும்.
  •  இப்போது மீண்டும் முகப்பு பக்கத்திற்கு சென்று உங்களுடைய Username , Password, Captcha  வை டைப்  Login செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • உள் சென்றதும் Service Wise என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். 
  • அருகில் உள்ள search box இல் PSTM என டைப் செய்யவும்.
  • இப்போது Issuance of PSTM Certificate for Govt Schools என்ற optionனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். உங்களுடைய ஆதார் எண்ணை டைப் செய்து CAN நம்பரை search செய்யவும்.
  • CAN நம்பரை select செய்து உங்களுடைய பிறந்ததேதி கொடுத்துவிட்டு submit கொடுக்கவும்.உங்களுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை டைப் செய்து Proceed என்ற  பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது திரையில் தெரியக்கூடிய விவரங்களை பூர்த்தி செய்க. அதாவது உங்களுடைய பெயர்,அப்பா பெயர்,அம்மா பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), மொபைல் எண் , பிறந்த தேதி,EMIS நம்பர், பள்ளியில் சேர்ந்த ஆண்டு , படித்து முடித்த ஆண்டு, படித்த வகுப்பு ,பள்ளியின் தன்மை , பள்ளியின் பெயர், Referenceற்கு பள்ளியில் படித்த TC யை upload செய்து submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். 
  •  இப்போது ரூ.60 கட்டணம் செலுத்தினால் உங்களுக்கு ஒரு Acknowledgement நம்பர்  ( ஒப்புகைச் சீட்டு ) வரும். சான்றிதழ் approve ஆனதும் இந்த நம்பரை வைத்து நீங்கள் தமிழ் வழிக் கல்வி சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

PSTM

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..


No comments:

Post a Comment