நலவாரியம் அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் தவறாக இருந்தாலோ அல்லது பாலினம்,பிறந்த தேதி போன்றவை தவறாக இருந்தாலோ அவற்றை சரி செய்த பின்னர்தான் அரசு வழங்கக்கூடிய எந்த ஒரு உதவிகளுக்கும் விண்ணப்பிக்க இயலும். இது போன்ற திருத்தம், நீக்கம்,பெயர் சேர்த்தல் போன்ற சேவைகளை நாம் ஆன்லைன் வாயிலாகவே மாற்ற முடியும் .எவ்வாறு மாற்றலாம் என்பதை பார்க்கலாம்.
- கீழே உள்ள Change Of Family Members என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுடைய Registration நம்பர் மற்றும் password கொடுத்து login / உள்நுழைய என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது மேலே உள்ள Service என்ற பட்டனைக் கிளிக் செய்யது அதில் Amendment என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து வரக்கூடிய பேஜ்ல் Change Of Family Members என்ற option னைக் கிளிக் செய்து கீழே உள்ள open என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது கீழே நீங்கள் நலவாரியம் அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுத்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் காண்பிக்கும்.
- இதில் யாருடைய பெயரை திருத்த வேண்டுமோ அவற்றை திருத்திக் கொள்ளலாம். மேலும் பாலினம்,பிறந்த தேதி,உறவுமுறை,திருமணநிலை போன்றவற்றையும் திருத்திக் கொள்ளலாம்.
- புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் எனில் Add More என்ற பட்டனைக் கிளிக் செய்து பெயரை சேர்த்துக்கொள்ளலாம் .
- பெயரை நீக்க வேண்டும் எனில் அருகில் உள்ள Delete Icon னைக் கிளிக் செய்து நீக்கிக் கொள்ளலாம்.
- நீங்கள் என்ன திருத்தம் மேற்கொள்ள வேண்டுமோ அதை சரி செய்த பின் கீழே ஆவணப் பதிவேற்றத்தில் உங்களுடைய மின்னணு ரேஷன் கார்டு மற்றும் பிறப்புச்சான்றிதழ் அல்லது படிப்புச்சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை சேர்த்து Upload செய்து Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- Submit செய்ததும் உங்களுக்கு ஒரு Acknowledgement நம்பர் வரும் அதை வைத்து status செக் செய்துகொள்ளலாம்.
Change Of Family Members
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment