நலாவாரியம் அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறது. இந்த அட்டை மூலம் பல தொழிலாளிகள் பயனடைந்துள்ளனர். இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தால்தான் அரசு வழங்கும் உதவிகளை நம்மால் பெற இயலும். சில பேருக்கு நலவாரிய அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மறந்துவிட்டால் அல்லது அந்த மொபைல் எண்ணை தொலைத்து விட்டால் நலவாரியம் website மூலமாக எந்த ஒரு உதவிகளுக்கும் விண்ணபிக்க முடியாது. இனி அவ்வாறு கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் உங்கள் மொபைல் மூலமாகவே நலவாரிய அட்டையில் வேறொரு எண்ணை இணைத்துக்கொள்ளலாம். எவ்வாறு இணைக்கலாம் என்பதை பார்க்கலாம்!
- கீழே உள்ள Find Mobile Number என்ற link யை கிளிக் செய்யவும்.
- உள்ள சென்றதும் உங்களுடைய Registration number அதாவது உங்களது நலவாரிய அட்டையில் உள்ள பதிவு எண்ணை டைப் செய்து submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ஓபன் ஆகும் பேஜ்ல் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்யும்போது கொடுத்த பழைய மொபைல் எண் இருக்கும். அந்த நம்பர் வைத்திருந்தால் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் கட்டத்தில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் எண்ணை கொடுத்துவிட்டு கீழே உள்ள Verify Aadhar என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் ஆதார் link செய்யப்பட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை டைப் செய்து Verify OTP என்ற பட்டாணிக் கிளிக் செய்யவும்.
- அடுத்து கீழே உள்ள submit என்ற பட்டாணிக் கிளிக் செய்யவும். இப்போது உங்களுடைய நலவாரிய அட்டையில் தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் இணைக்கப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment