உங்க PF-ல் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு முதலில் தேவையானது UAN நம்பர் . அந்த நம்பர் தெரியவில்லை என்றால் உங்களால் பணம் எடுக்க முடியாது.அது மட்டும் இல்லாமல் இந்த UAN என்ற நம்பர் இஇல்லாமல் PF-இல் எந்தவிதமான தகவலும் நம்மால் பார்க்க முடியாது .அதனால் இந்த UAN என்ற நம்பர் மிகவும் அவசியம் . UAN என்ற நம்பர் எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை கீழே பார்க்கலாம் .
- கீழே உள்ள Know Your UAN என்ற லிங்கில் உள் செல்லவும்.
- இப்போது ஓபன் ஆகும் பேஜ்ல் PF பிடித்தம் செய்வதற்கு எந்த மொபைல் எண் கொடுத்தீர்களோ அந்த எண்ணை Mobile Number என்ற கட்டத்தில் டைப் செய்யவும்.
- கீழே உள்ள Captcha வை சரியாக அருகில் உள்ள கட்டத்தில் டைப் செய்து Request OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை கட்டத்தில் டைப் செய்து மீண்டும் Captcha வை டைப் செய்து Validate OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களது ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயர் மற்றும் பிறந்த தேதியை சரியாக டைப் செய்யவும்.
- பின் கீழே ஆதார் எண்ணை டைப் செய்து கீழே உள்ள Captcha வைக் சரியாக கட்டத்தில் டைப் செய்து Show My UAN என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய UAN நம்பர் திரையில் காண்பிக்கும்.அதை Note செய்து கொள்ளவும்.
Know Your UAN
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment