உங்களது ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப தலைவரது புகைப்படம் ,பெயரை நீக்க வேண்டுமா ? எளிமையாக ஆன்லைன் மூலமாகவே மாற்றி விடலாம். எவ்வாறு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்!
தேவையான ஆவணங்கள் :
- குடும்ப தலைவர் விட்டதால் புகைப்படம் மாற்ற வேண்டுமெனில், அவரின் இறப்புச்சான்றிதழ் மற்றும் புதிதாக மாற்றக்கூடிய குடும்ப தலைவரது புகைப்படம்.
- வேறொரு காரணத்திற்காக குடும்ப தலைவரை மாற்ற வேண்டுமெனில் புதிதாக மாற்றக்கூடிய குடும்ப தலைவரது ஆதார் அட்டை மற்றும் புகைப்படம்.
( குறிப்பு- புகைப்படம் 5 MB க்குள் இருக்க வேண்டும்.)
- முதலில் கீழே உள்ள 'குடும்ப தலைவர் மாற்றம் செய்ய' என்ற link யை கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் பயனாளர் உள்நுழைவு என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அதில் ரேஷன்கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் டைப் பண்ணவேண்டும் .
- பிறகு கொடுக்கப்பட்ட கேப்சாவை கீழே உள்ள கட்டத்தில் டைப் செய்து Sent OTP கொடுக்கவேண்டும் .
- உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP போட்டு பதிவுசெய் என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும் .
- இப்போது உங்களது குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் விவரங்கள் காண்பிக்கும்.
- நீங்கள் யாருடை பெயரை குடும்ப தலைவராக மாற்றம் செய்ய வேண்டுமோ அவருடைய பெயருக்கு நேராக வலது பக்கம் Swipe செய்தால் "நடவடிக்கை" என்ற பட்டன் அருகில் பென்சில் போன்ற Icon இருக்கும் அதை கிளிக் செய்து உறவுமுறையில் "குடும்ப தலைவர்" என மாற்றிக்கொள்ளவும்.
- இப்போது வலது பக்கத்தில் உள்ள கட்டத்தை select செய்யவும். இதே போல் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட குடும்பத்தலைவருக்கு என்ன உறவு முறை என்பதையும் தேர்வு செய்து வலது பக்கத்தில் உள்ள கட்டத்தை select செய்யவும்.
- மாற்றிய பின் கீழே குடும்ப தலைவர் மாற்றம் செய்வதற்கான காரணம் கேட்கும் அதை select பசெய்யவேண்டும். "இதர" என்ற option னை select செய்திருந்தால் என்ன காரணம் என்பதை டைப் செய்ய வேண்டும்.
- பின் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட குடும்ப தலைவரது புகைப்படத்தை பதிவேற்று என்ற பட்டனைக் கிளிக் செய்து Upload செய்துகொள்ளவும்.
- அடுத்து கீழே ஆவணங்கள் என்ற பகுதியில் மேலே கூறப்பட காரணங்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் select செய்து அருகில் உள்ள பதிவேற்று என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது கீழே உறுதிப்படுத்துதல் என்ற தலைப்பிற்கு கீழே உள்ள சின்ன கட்டத்தை select செய்து பதிவுசெய் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு ஒரு குறிப்புஎண் வரும் அதை note செய்துகொள்ளவும்.
- அந்த Acknowledge Number வைத்து Status Check செய்துகொள்ளலாம்.
குடும்ப தலைவர் மாற்றம் செய்ய
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment