நீங்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்,நீக்கம்,முகவரி மாற்றம் போன்ற எதாவது ஒரு திருத்தம் மேற்கொண்டால் உங்களுடைய கோரிக்கைக்கான விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு அறியலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்!
- கீழே உள்ள விண்ணப்பத்தின் நிலையை அறிய என்ற link யை தொடுவதன் மூலம் நீங்கள் வேறொரு தளத்திற்கு செல்வீர்கள்.
- இப்போது திரையில் தெரியக்கூடிய குறிப்பு எண் என்ற கட்டத்தில் நீங்கள் திருத்தம் மேற்கொள்ளும்போது உங்களுக்கென்று கொடுக்கப்பட்ட குறிப்பு எண் அதாவது Acknowledgement Number ரை கொடுக்க வேண்டும்.
- பின் கீழே உள்ள பதிவுசெய் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட நிலை, ஆவண சரிபார்ப்பு நிலை,துறை சரிபார்ப்பு நிலை,கோரிக்கை அனுமதிக்கப்படுதல் நிலை என நான்கு வகையான படிநிலைகளில் உங்களுடைய விண்ணப்பம் என்ற நிலையில் உள்ளது என்பதை Check செய்துகொள்ளலாம்.
- இதில் உங்களுடைய விண்ணப்பபத்தின் கோரிக்கை அனுமதிக்கப்பட்டால் நீங்கள் மேற்கொண்ட திருத்தம் Approval ஆகிவிட்டது என்று அர்த்தம்.இப்போது நீங்கள் உங்களுடைய மின்னணு ரேஷன் கார்டை டவுன்லோட் செய்து check செய்துகொள்ளலாம்.
விண்ணப்பத்தின் நிலையை அறிய
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment