தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் நாம் எல்லாவகையான சேவைகளையும் இணைய வழியிலே செய்துகொள்ளலாம். எந்த வகையான சேவைகளையும் பெறுவதற்கு அது தொடர்பான அலுவலகங்களுக்கும் செல்ல தேவை இல்லை. அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே பெறமுடியும். அவ்வாறு இருக்க ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வதற்கும் தாலுகா அலுவலகம் செல்ல தேவை இல்லை .மொபைல் மூலமாகவே மாற்றிக்கொள்ள இயலும். எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
தேவையான ஆவணங்கள் :
- சொந்த வீட்டில் வசிப்பவராக இருந்தால் வீட்டு வரி ரசீதும் வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால் மின் கட்டண ரசீதும் தேவைப்படும்.
- குடும்ப தலைவரது ஆதார் அட்டை. நீங்கள் எந்த முகவரிக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதே முகவரி தான் ஆதார் அட்டையிலும் இருக்க வேண்டும்.
- அந்த முகவரியில் உள்ள சிலிண்டர் புத்தகம்.
மேலே கூறப்பட்ட மூன்று ஆவணங்களையும் 2 MB க்குள் ஒரே PDF file ஆக ஸ்கேன் செய்து கொள்ளவும்.
- முதலில் கீழே உள்ள "முகவரி மாற்றம் " என்ற link யை கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் பயனாளர் உள்நுழைவு என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அதில் ரேஷன்கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் டைப் பண்ணவேண்டும் .
- பிறகு கொடுக்கப்பட்ட கேப்சாவை கீழே உள்ள கட்டத்தில் டைப் செய்து Sent OTP கொடுக்கவேண்டும் .
- உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP போட்டு பதிவுசெய் என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும் .
- இப்போது நேரடியாகவே உள்ளே சென்று விடும்.திரையில் உங்களுடைய பழைய முகவரி இருக்கும் கீழே புதிய முகவரி விவரங்கள் என்ற பகுதியில் உங்களுடைய கதவு எண், தெரு பெயர்,கிராமம், தாலுகா,மாவட்டம் மற்றும் பின்கோடு முதலிய விவரங்களை சரியாக டைப் செய்யவும்.
- முகவரி விவரங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப் செய்யவும்.
- கீழே ஆவணங்கள் என்ற பகுதியில் நீங்கள் எந்த Document upload செய்ய போகிறீர்களோ அந்த Document டை select செய்துவிட்டு அருகில் ஸ்கேன் செய்து upload செய்து பதிவேற்ற என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது கீழே உள்ள உறுதிபடுத்துதல் என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள கட்டத்தை select செய்து பதிவுசெய்ய என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு ஒரு குறிப்புஎண் வரும் அதை note செய்துகொள்ளவும்.
- அந்த Acknowledge Number வைத்து Status Check செய்துகொள்ளலாம்.
முகவரி மாற்றம்
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment