உங்களது வோட்டர் ஐடி தொலைந்து விட்டதா? வோட்டர் Epic நம்பர் தெரியவில்லையா? வாக்காளர் பட்டியலில் மிக எளிமையான வழியில் உங்களது வோட்டர் Epic நம்பரை கண்டுபிடிக்கலாம்! எவ்வாறு என்பதை பாப்போம்!
- முதலில் கீழே உள்ள EPIC Number என்ற லிங்கை கிளிக் செய்து உள் செல்லவும்.
- இப்போது ஓபன் ஆகும் பேஜ்ல் Search by Details , Search By Epic , Search By Mobile என உங்களுக்கு மூன்று விதமான Options காண்பிக்கும்.
- இதில் Search By Details என்ற பகுதியில் உங்களுடைய மாநிலம்,மொழியை select செய்யவும்.
- பின் கீழே Personal Details ல் உங்களுடைய பெயர், Surname ( விருப்பப்பட்டால்) , Relative Name (தந்தை/ கணவர் பெயர்) , பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்கள் உங்கள் வோட்டர் ஐடியில் உள்ளவாறு டைப் செய்யவும்.
- கீழே உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதியை select செய்து விட்டு கட்டத்தில் உள்ள Captcha வை சரியாக டைப் செய்து Search என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் வோட்டர் Epic நம்பருடன் உங்களுடைய விவரங்கள் காண்பிக்கும். அதில் Epic நம்பரை copy செய்து உங்களுடைய மின்னணு வாக்காளர் அட்டையை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
- அல்லது மூன்றவதாக உள்ள Search By Mobile என்ற பகுதியில் உங்களது மாநிலம்,மொழியை select செய்யவும்.
- கீழே உங்களுடைய வோட்டர் ஐடியுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை டைப் செய்து Send OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு வரக்கூடிய OTP யை enter செய்து கட்டத்தில் உள்ள Captcha வை சரியாக டைப் செய்து Search என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் வோட்டர் Epic நம்பருடன் உங்களுடைய விவரங்கள் காண்பிக்கும். அதில் Epic நம்பரை copy செய்து உங்களுடைய மின்னணு வாக்காளர் அட்டையை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
Find Voter Id
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment