கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஏராளம் ! அவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்றால் டிக்கெட் முன்பதிவு என்பது அவசியம் . இல்லை என்றால் சுவாமி தரிசனம் செய்ய இயலாது. டிக்கெட் முன் பதிவு செய்வதற்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது. இலவசமாகவே செய்து கொள்ளலாம். அதை எவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்வது என்பதை பாப்போம்!
தேவையான ஆவணங்கள்:
- புகைப்படம்
- ஆதார் அட்டை
( குறிப்பு- சுவாமி ஐயப்பனை தரிசிப்பதற்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார். பெண்களுக்கு அனுமதி கிடையாது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.)
- டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கீழே உள்ள "Sabarimalai Ticket Booking" என்ற link யை கிளிக் செய்து உள் செல்க.
- ஓபன் ஆகும் முகப்பு பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே Register செய்திருந்தால் உங்களுடைய Username, Password கொடுத்து Login செய்து கொள்ளவும்.
- இல்லை என்றால் கீழே உள்ள Register என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றவும். பின் உங்கள் பெயர்,மொபைல் நம்பர்,பிறந்ததேதி , முகவரி (ஆதாரில் உள்ளவாறு) , போன்ற விவரங்களை கொடுக்கவும். பின் Photo ID Proof என்ற கட்டத்தை select செய்து Aadhar என்ற option னைக் கிளிக் செய்து அருகில் உள்ள கட்டத்தில் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- அடுத்து கீழே உங்களுடைய மெயில் ஐடி மற்றும் நீங்கள் விருப்பப்பட்ட Password கொடுத்து மீண்டும் Confirm Password கொடுத்து Agree பட்டனைக் கிளிக் செய்து Continue என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய அக்கௌன்ட் Register ஆகிவிடும்.
- பின் மீண்டும் முகப்பு பக்கத்திற்கு சென்று நீங்கள் Set செய்த Username மற்றும் Password டைக் கொடுத்து Login செய்துகொள்ளவும்.
- ஓபன் ஆகும் பக்கத்தில் Date என்ற கட்டத்தில் நீங்கள் தரிசனம் செய்ய விரும்பும் தேதியை சரியாக உள்ளிடவும்.
- இப்போது கீழே அந்த தேதியில் குறிப்பிட்ட நேரங்களில் எத்தனை டிக்கெட் உள்ளது என வரிசையாக காண்பிக்கும். அதில் நீங்கள் தரிசனம் செய்யும் நேரத்தை select செய்யவும்.
- கீழே உங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால் Self என்ற பட்டனையும் மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால் Others என்ற பட்டனையும் select செய்து Add Pilgrim என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய பெயர்,மொபைல் எண்,பாலினம்,பிறந்த தேதியைக் கொடுக்கவும். பின் Photo ID Proof என்ற கட்டத்தை select செய்து Aadhar என்ற option னைக் கிளிக் செய்து அருகில் உள்ள கட்டத்தில் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- அடுத்து உங்களுடைய முகவரி விவரங்களைக் கொடுத்து கீழே உங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றவும்.
- பின் கீழே உள்ள Agree பட்டனைக் கிளிக் செய்து Add என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய பெயர் Add ஆகிவிடும். கீழே உங்களுக்கு பிரசாதம் பற்றிய விவரங்கள் காண்பிக்கும் விருப்பபட்டால் அதன் எண்ணிகையை கொடுத்து அதற்கான தொகையை செலுத்தவும். இல்லை என்றால் அதை Skip செய்து கொள்ளலாம்.
- அடுத்து வேறொருவருக்கு முன்பதிவு செய்ய விரும்பினால் மேலே உள்ள Add Pilgrim என்ற பட்டனைக் கிளிக் செய்து அதே போல் எல்லா விவரங்களையும் கொடுத்து புகைப்படத்தை பதிவேற்றி ஒவ்வொரு பெயராக Add செய்து கொள்ளவும்.
- கீழே Add to Wishlist என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். ஏதேனும் தவறாக இருப்பின் பென்சில் Icon னைக் கிளிக் செய்து திருத்திக் கொள்ளவும். எல்லாம் சரியாக இருந்தால் Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய Booking Id காண்பிக்கும். கீழே Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது டிக்கெட் Book ஆகிவிடும். அதை History யில் சென்று செக் செய்து கொள்ளவும்.அதில் உங்களுடைய Transaction Id க்கு நேரே வலது பக்கம் Download என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய Ticket யை Download செய்து Print எடுத்துகொள்ளவும்.
Sabarimalai Ticket Booking
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment