தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறது. இதில் தொழிலாளர்கள் பயனடையுமாறு நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய திருமணத்திற்கோ அல்லது அவர்களின் முதல் இரண்டு குழந்தைகளின் திருமணத்திற்கோ ரூ.20000 வரை உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். அந்த உதவித்தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி விரிவாக காண்போம்.
- கட்டுமான நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் (ஆண்/பெண் இரு பாலருக்கும்) அல்லது அவர்களுடைய குழந்தைகளின் திருமணத்திற்கு ரூ.20000 உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம்.
- கட்டுமான அட்டை அல்லாத ஓட்டுனர் நலவாரிய அட்டை அல்லது உடலுழைப்பு நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் (ஆண்/பெண் இரு பாலருக்கும்) அல்லது அவர்களுடைய குழந்தைகளின் திருமணத்திற்கு ஆண்களுக்கு ரூ.3000 மும் பெண்களுக்கு ரூ.5000 மும் உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம்.
- திருமணம் செய்து கொள்பவர்கள் ஆண் எனில் 21 வயதும் பெண் எனில் 18 வயதும் நிரம்பியிருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
- தொழிலாளியின் நலவாரிய அட்டை
- மணமக்களின் திருமணப் பதிவு சான்று
- திருமணப் பதிவு சான்று இல்லையெனில் திருமண மண்டப ரசீது/கோவில் ரசீது/திருமண அழைப்பிதழ்-திருமண அழைப்பிதழில் அச்சகத்தின் விவரம் குறிப்பிடப்படிருக்க வேண்டும்
- மணமக்களின் புகைப்படம்
- வயது சான்றுகாக வாக்காளர் அட்டை/பள்ளி சான்று/ஓட்டுனர் உரிமம்/குடும்ப அட்டை/பிறப்புச் சான்றிதழ்
- நலத்திட்ட உறுதிமொழிச் சான்று - தொழில் சார்ந்த பதிவுபெற்ற தொழில்சங்க தலைவர் அல்லது செயலரிடம் தொழிற்சங்க முத்திரை மற்றும் கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது ?
- கீழே உள்ள "திருமண உதவித்தொகை பெற " என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- ஓபன் ஆகும் link இல் உங்களுடைய நலவாரிய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் டைப் செய்து உள் நுழைய என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இபோது மேலே உள்ள Claims என்ற பட்டனைக் கிளிக் செய்து அதில் Marriage என்ற option னை கிளிக் செய்யவும்.
- இப்போது அங்கு கேட்ககூடிய அனைத்து விவரங்களையும் சரியாக enter செய்து கேட்ககூடிய Documents அனைத்தையும் upload செய்து sumbit என்ற பட்டனைக் கிளிக் செய்தால் Preview application காண்பிக்கும். அவற்றை செக் செய்துவிட்டு sumbit செய்தால் ஒரு Reference Number வரும் . அவற்றை note செய்துகொள்க.
- இந்த எண்ணை வைத்து status செக் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment