முதியவர்களுக்கு ரூ.5000 வரை பென்ஷன் பெறலாம் ! மத்திய அரசின் சேமிப்பு திட்டம் ! | Adult Pension Yojana Scheme Full Details ! | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Saturday, February 10, 2024

முதியவர்களுக்கு ரூ.5000 வரை பென்ஷன் பெறலாம் ! மத்திய அரசின் சேமிப்பு திட்டம் ! | Adult Pension Yojana Scheme Full Details ! | Techinfo

மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக உருவாக்கியுள்ளது.அவற்றில்  ஓன்று தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் இந்த திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது.மக்கள் தங்களது முதிர்வுக்கு பின் மாதம் ரூ.1000 முதல்  5000 வரை இந்த திட்டத்தில்  ஓய்வூதியம் பெற இயலும். வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் யாவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற இயலும்.  இதில் நாம் விரும்பிய தொகையை  அதாவது 60 வது வயதில்  மாதம்  ரூ.1000 அல்லது ,ரூ.2000,அல்லது ரூ.3000 என ரூ. 5000  வரையில் ஓய்வூதியம் பெறுமாறு நாம் விரும்பிய திட்டங்களை தேர்வு செய்ய இயலும். திட்டத்தில் சேர்ந்துள்ள சந்தாதாரர் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதிகள்:

  • சந்தாதாரர் 18-40 வயதிற்குள் இருக்க  வேண்டும். 
  • சந்தாதாரர்  தங்களது  60 வயதை நிரம்பிய பின்னரே 100 சதவீத முழு பென்ஷன் தொகையை பெற இயலும்.
  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் உபயோகத்தில் உள்ள மொபைல் எண் வைத்திருக்க வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • உங்கள் அருகில் உள்ள வங்கியில் சென்று அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வேண்டிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...


No comments:

Post a Comment