மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதன் படி மத்திய அரசின் PM-SYM அதாவது Pradhan Mantri Shram Yogi Maan-dhan என்னும் பென்ஷன் திட்டம் மூலம் 60 வயதிற்கு மேல் மாதம் ரூ.3000 பென்ஷன் தொகையை பெற இயலும். இதில் வயதிற்கு ஏற்றார் போல் மாதம் மாதம் ஒரு குறிப்பிட தொகையை நாம் செலுத்த வேண்டும். அதாவது 18 வயது என்றால் பிரதி மாதம் ரூ.55 செலுத்தினால் மத்திய அரசும் நம் கணக்கில் ரூ.55 செலுத்தும். இவ்வாறு நாம் 60 வயது வரை செலுத்த வேண்டும். சந்தாதாரர் இடையில் இறந்துவிட்டாலும் அவரது நியமனதாரர் அந்த தொகையை செலுத்தி பென்ஷன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது சந்தாதாரர் பென்ஷன் வாங்கி கொண்டிருக்கும்போது இறந்துவிட்டாலும் அந்த பென்ஷன் தொகை நியமனதாரர் வாங்கிகொள்ளலாம்.
இந்த திட்டத்தில் சேர தகுதிகள் என்ன?
- நீங்கள் மத்திய அரசின் E-Shram அட்டை வைத்திருக்க வேண்டும்.
- வயது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
- மாத வருமானம் 15,000 ற்குள் இருக்க வேண்டும்.
- அமைப்பு சார தொழிலாளர்களாக இருக்க வேண்டும்.
- PF , ESI பிடித்தம் செய்திருக்க கூடாது.
- வருமான வரி செலுத்துபவர் இந்த திட்டத்தில் நிராகரிக்கபடுவார்.,
விண்ணப்பிப்பது எப்படி ?
- கீழே உள்ள "Apply" என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்க.
- ஓபன் ஆகும் பக்கத்தில் Self Entrollment என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய மொபைல் எண்ணை enter செய்தால் வரும் OTP யை உள்ளீடு செய்து உள்செல்லவும்.
- அருகில் உள்ள Service என்ற option னைக் கிளிக் செய்து Entrollment என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் 6 படிநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
- Entrollment Form
- Bank and Nominee Details
- download Mandate Form
- Upload Mandate Form
- Payment
- Download Card
- மேலே கூறப்பட்ட முதல் இரண்டு நிலைகளில் உங்கள் E-Shram அட்டை மற்றும் உங்கள் வங்கி விவரங்கள்,நியமனதாரர் விவரங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்.
- download Mandate Form என்பது முதல் இரண்டு நிலைகள் பூர்த்தி செய்த பின் ஒரு Mandate Form வரு அதை பிரிண்ட் எடுத்து உங்கள் கையொப்பம் இட்ட பின் நான்காவது நிலையில் அந்த form யை ஸ்கேன் செய்து upload செய்ய வேண்டும்.
- பின் நீங்கள் Payment நிலைக்கு செல்வீர்கள். பணம் செலுத்திய பின் உங்களுக்கு PM-SYM இன் அட்டை வந்துவிடும். அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- பின் பிரதிமாதம் உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பென்ஷன் தொகை கழிந்துவிடும்.
No comments:
Post a Comment