பெண்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சாவித்திரி பாய் ஜோதிராவ் பூலே பெல்லோஷிப் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் நோக்கம் பெண் பட்ட படிப்பிற்கு பின் மேல் படிப்பை தொடர மாதம் ரூ.35000 வரை ஊக்கதொகை வழங்குவதாகும். இந்த திட்டத்தை பற்றிய முழு விளக்கத்தைக் காண்போம்.
- ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணிற்கு மட்டுமே உதவித்தொகை கொடுக்கப்படும்.
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் முழு நேர Ph.D படிப்பு படிக்க வேண்டும். தொலைதூர கல்வியோ அல்லது பகுதிநேர படிப்பு பயிலும் மாணவிகள் இந்த திட்டத்திற்கு விண்ணபிக்க இயலாது.
- SC/ST/OBC பிரிவைச் சேர்ந்த மாணவிகள் 45 வரையிலும் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் விண்ணபிக்கலாம்.
- இந்த திட்டத்தில் சேர 100 ரூபாய் உறுதிமொழி பத்திரத்தை மாணவியின் பெற்றோர்கள் சமர்பிக்க வேண்டும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment