தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு கடன் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம். தற்போது பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் பெண்களின் வாழ்வியல் முன்னேற்றதிற்காகவும் அன்னபூர்ணா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சுய தொழில் கடன் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கேட்டரிங் தொழில் தொடங்க விருப்பமுள்ள பெண்களுக்கு ரூ.50,000/- கடனாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் இந்த தொகையை திரும்ப செலுத்த சுய தொழில் முனைவோர்களுக்கு 3 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையானது SBI வங்கிகள் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்த கடன் தொகை விவரங்களை பற்றி முழுதும் அறிந்து கொள்ள அருகில் உள்ள SBI வங்கி கிளைகளை அணுகவும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment