நீங்கள் மத்திய அரசு வழங்கும் eShram அட்டை வைத்திருப்பவரா? உங்களது அட்டையில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? அதாவது உங்களது தொழில் , பிறந்த தேதி, நியமனதாரர் மாற்றம்,கல்வித்தகுதி , மொபைல் எண் போன்ற மாற்றங்களை eShram அட்டையில் நீங்களே எளிதாக மாற்றிக்கொள்ள இயலும். எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
- கீழே உள்ள Update e Shram என்ற லிங்கைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- ஓபன் ஆகும் பக்கத்தில் உங்களுடைய URN Number , பிறந்த தேதி மற்றும் captcha வை டைப் செய்து Generate OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து Validate என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது அங்கு கேட்ககூடிய விவரங்களை பூர்த்தி செய்து Get Schemes என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது Home Page ற்கு சென்று Profile Update என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கு எந்த விவரம் மாற்ற வேண்டுமோ அவற்றை கிளிக் செய்து மாற்றி விட்டு Update என்ற பட்டனைக் கிளிக் செய்தால் உங்களுடைய eShram அட்டையில் Update ஆகிவிடும்.
- பின் Back என்ற பட்டனைக் கிளிக் செய்து Download Card என்ற பட்டனைக் கிளிக் செய்து கார்டை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Update e Shram
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment