சொத்து வரி, தொழில் வரி , குடிநீர் கட்டணம் இந்த மாதிரி வரிகளை நேரடியாக தான் போய் செலுத்துவோம் . ஆனால் தற்போது தமிழக அரசு இந்த வரிகளையும் ஆன்லைன் வழியாகவே செலுத்தக் கூடிய முறையை ஏற்படுத்தியுள்ளது .எப்படி ஆன்லைன் மூலமாக வரி செலுத்துவது என்பதை பார்க்கலாம் !
- கீழே உள்ள Tax Pay என்ற லிங்கை கிளிக் செய்து உள் செல்லவும் .
- ஓபன் ஆகக்கூடிய பேஜ் -ல் வரி வகை என்ற தலைப்பில் சொத்து வரி , தொழில் வரி , குடிநீர் கட்டணம் எனும் உட்பிரிவுகள் இருக்கும் .
- அதில் நீங்கள் எந்த வரி செலுத்த போறீங்களோ அந்த வரியை கிளிக் செய்யவும் . ( எடுத்துகாட்டாக , நீங்கள் சொத்து வரியை கிளிக் செய்திருந்தால் )
- கீழே உங்களுடைய மாவட்டம் ,வட்டம், பஞ்சாயத்து ஆகியவற்றை Select செய்து கொள்ளவும் .
- அடுத்து உங்களுடைய கைப்பேசி எண் (அல்லது ) வரி விதிப்பு எண் (அல்லது) கதவு எண் எதாவது ஒன்றை உள்ளீடு செய்யவும் .
- கீழே இருக்க கூடிய CAPTCHA நம்பரை சரியாக டைப் செய்து Search செய்யவும்
- அடுத்து வரக்கூடிய பேஜ்-ல் உங்களுடைய Details show ஆகும். அதில் View என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்போது உங்களுடைய சொத்து வரிக்கான விவரங்கள் காண்பிக்கும் .அதை சரிபார்த்தபின் Pay என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- அடுத்து Open ஆகும் பேஜ் -ல் யார் வரி செலுத்துகிறாரோ அவருடைய பெயர் , மொபைல் எண் , ஈமெயில் கொடுக்க வேண்டும் .
- மீண்டும் கீழே இருக்கக் கூடிய CAPTCHA நம்பரை சரியாக டைப் செய்து செய்யவும் .
- மேற்கொண்டு உங்களுடைய விவரங்கள் முழுதாகக் காண்பிக்கும் .
- Scroll செய்தால் கீழே கட்டண முறை என்ற பகுதியில் ஆன்லைன் என்ற Option ஐ கிளிக் செய்து Pay பட்டனைக் கிளிக் செய்யவும் .
- இப்போது நீங்கள் செலுத்தியக் கட்டணத்திற்கு Receipt காண்பிக்கும் .அதை டவுன்லோட் செய்து பிரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ளவும் .
நீங்கள் ஏற்கனவே வரி செலுத்தி அதற்கான ரசீதை தொலைதுவிட்டலோ அல்லது மீண்டும் ரசீதை பெற வேண்டும் என்றாலோ கீழே உள்ள TAX Recipt என்ற link யைக் கிளிக் செய்து அதில் கேட்க்கூடிய விவரங்களை enter செய்து Show என்ற பட்டனைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
TAX Pay
TAX Recipt
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment