TNEGA வில் வருமானச் சான்று , சாதிச் சான்று , OBC சான்று, வாரிசு சான்று என பல்வேறு சான்றிதழ்கள் விண்ணப்பிக்கிறோம்.இவ்வாறு விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்களின் நிலையை நாம் மொபைல் மூலமாகவே அறிந்து கொள்ள இயலும். அந்த சான்றிதழுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எவ்வாறு என்பதை பாப்போம்!
- முதலில் நீங்கள் எந்த வகையான சான்றிதழ் விண்ணப்பித்தீர்களோ அதன் விண்ணப்ப எண்ணை குறித்து வைத்துக்கொள்ளவும்.
- கீழே உள்ள Check Status என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- இப்போது திரையில் Certificate Number என்ற Box இருக்கும் அதில் உங்கள் விண்ணப்ப எண்ணை டைப் செய்து கீழே உள்ள captcha வை சரியாக டைப் செய்து search செய்தால் உங்கள் விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- அதில் உங்கள் கிராம அலுவலர் (VAO) , RI மற்றும் தாசில்தார் ஆகியோரின் ஒப்புதல் அளிக்கப்பட பின் கீழே Download Certificate என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் சான்றிதழை பதிவிறக்கி கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment