கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்களுக்கு பிரதி மாதம் ரூ.1000 அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை சுமார் 1 கோடியே 58 லட்சம் மகளிர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். தற்போது இந்த ஜனவரி மாதத்தில் இருந்து புதிதாக 9 லட்சம் மகளிர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கப் பெற்று வருகின்றனர். மாதம் பிறந்த 15 ஆம் தேதி சரியாக அவர்களுடைய வங்கி கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படுகிறது. ஆனால் தற்போது பிரதி மாதம் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் இந்த தொகை வரவுவைக்க வேண்டும் எனவும் தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால் உரிமைத்தொகையை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment