ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தெரியவில்லையா? எளிதாக கண்டுபிடிக்கலாம்! | Verify Aadhaar linked Mobile number | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, March 12, 2024

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தெரியவில்லையா? எளிதாக கண்டுபிடிக்கலாம்! | Verify Aadhaar linked Mobile number | Techinfo


தற்போது வங்கிகணக்கு , பான்கார்டு, மின் இணைப்பு போன்றவற்றுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைப்பதன் மூலம் மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெரும்போது  அவற்றில்  ஏற்படும் மோசடிகளை தடுக்க இயலும்.  இவ்வாறான சேவைகளை பெரும் போது ஆதாருடன் மொபைல் எண் என்பது கட்டாயமாக இணைத்திருப்பது என்பது  அவசியமாகிறது. ஆதார் அட்டை எடுக்கும் போது ஒரு மொபைல் எண்ணுடன் இணைத்திருப்போம் ஆனால் தற்போது அந்த எண் மறந்து போயிருக்கும்  எந்த எண்ணை கொடுத்திருப்போம் என்று தெரியாமலிருக்கும். இவ்வாறு குழம்புவதற்கு இனி அவசியம் இல்லை. ஆதாருடன் எந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை  எளிதாக கண்டுகொள்ள இயலும். எவ்வாறு என்பதை பார்க்கலாம்! 
  • கீழே உள்ள Verify Mobile என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
  • இப்போது உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை டைப் செய்து கீழே உள்ள captcha வை சரியாக enter செய்து Send OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். 
  • உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் OTP send ஆகும். இல்லை யென்றால் Send ஆகாது.
  • இவ்வாறு நீங்கள் கையில் வைத்திருக்கும் எந்தவொரு மொபைல் எண்ணையும் enter செய்து பார்க்கலாம்!
ஒருவேளை உங்கள்  ஆதாருடன்  இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உபயோகத்தில் இல்லாமலோ அல்லது அந்த மொபைல் தொலைந்து போயிருந்தாலோ நீங்கள் உங்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று தற்போது உபயோகத்தில் உள்ள கைப்பேசி எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும். 

Verify Mobile.  

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment