தமிழக அரசின் தொழிலாளர் நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை/விபத்து மரண உதவித்தொகை , மகப்பேறு உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதில் மகப்பேறு உதவித்தொகையில் என்பது இரண்டு வகை உள்ளது. அதாவது,
கட்டுமான / ஓட்டுநர் தொழிலாளர் நலவாரியம்
மகப்பேறு உதவித்தொகை : RS.18,000
கருகலைப்பு / கருச்சிதைவு : ரூ.3000
2 .இதர தொழிலாளர் நலவாரியம்
மகப்பேறு உதவித்தொகை : RS.6000
கருகலைப்பு / கருச்சிதைவு : ரூ.3000
தகுதி & விதிமுறைகள் :
·
பதிவு
பெற்ற பெண் உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்
·
நலவாரிய அட்டையை காலாவதியாகி இருக்க கூடாது.. தவறாமல் புதுப்பித்து
இருக்க வேண்டும்
·
முதல் இரண்டு குழந்தைக்கு மட்டுமே விண்ணபிக்க முடியும்.ஏற்கனவே
2 குழந்தை உள்ளவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க இயலாது.
·
கருகலைப்பு / கருச்சிதைவு க்கும் முதல் இரண்டு குழந்தைக்கு மட்டுமே
விண்ணபிக்க முடியும்.
·
இதில் இரண்டு தவணையாக விண்ணப்பிக்க வேண்டும்.
·
முதல் தவணையாக கருவுற்ற 7 மாதத்திலிருந்து 9 மாதத்திற்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.
·
இரண்டாவது தவணைக்காக குழந்தை பிறந்து 2 முதல் 5 மாதத்திற்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
·
மருத்துவர் வழங்கிய சான்றில் முதல் குழந்தை அல்லது இரண்டாவது
குழந்தை என்ற விபரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
·
ஆதார் அட்டை
·
குடும்ப அட்டை
·
நலவாரிய அட்டை
·
நலத்திட்ட உறுதிமொழி சான்று
·
அரசு மருத்துவமனையின் உதவி அறுவை சிகிச்சை நிபுணரிடமிருந்து
கர்ப்பத்திற்கான சான்றிதழ் (முதல் தவணை)
·
குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (இரண்டாவது தவணை)
·
கருச்சிதைவிற்கான சான்றிதழ் (கருச்சிதைவுக்கு விண்ணப்பத்திற்கு
மட்டும்)
·
கருக்கலைப்பிற்கான சான்றிதழ் (கருக்கலைப்பு விண்ணப்பத்திற்கு
மட்டும்)
·
பேங்க் புக்
·
போட்டோ / கையெழுத்து
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- கீழே உள்ள "Download Claim Certificate" என்ற link யைக் கிளிக் செய்து படிவத்தை டவுன்லோட் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொள்க.
- பின் கீழே உள்ள "மகப்பேறு உதவித்தொகை பெற " என்ற link யைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து login செய்யவும்.
- அடுத்து வரக்கூடிய பேஜ்ல் Claim என்ற option னைக் கிளிக் செய்து அதில் Maternity/Miscarriage/Termination of Pregnancy என்ற பிரிவை கிளிக் செய்யவும்.
- இப்போது ஓபன் ஆகும் விண்ணப்பத்தில் கேட்கக்கூடிய விவரங்களை கொடுத்து submit செய்தால் உங்களுக்கு ஒரு விண்ணப்ப எண் வரும். அதையும் மொபைல் எண்ணையும் வைத்து நீங்கள் உங்கள் விண்ணப்ப நிலையை கண்காணித்து கொள்ளலாம்.
- உங்களது விண்ணப்பம் Approve ஆகிய பின் உதவித்தொகை உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
No comments:
Post a Comment