Gpay யின் Self Transfer பற்றி தெரியுமா? இத படிங்க....| G Pay Self Transfer ( Account to Account ) Full Explain | Tech info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, March 13, 2024

Gpay யின் Self Transfer பற்றி தெரியுமா? இத படிங்க....| G Pay Self Transfer ( Account to Account ) Full Explain | Tech info

நம் அனைவரது மொபைல்களிலும்  Google Pay என்ற பண பரிவர்த்தனை செய்யப்படும் செயலி  இருக்கும். இதில் நாம் நம்முடைய வங்கி கணக்கில் உள்ள தொகைகளை எளிதாக இருந்த இடத்தில் இருந்தே மற்றவரின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலும். இதற்கு அந்த நபரின் வங்கி கணக்கு எண் கூட அவசியமில்லை அந்த நபரும் Google Pay பயனாளராக இருந்தால் அவருடைய மொபைல் எண் மூலமாகவே அவரது வங்கி கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்ய இயலும். இதற்காக GPay நிறுவனம் பயனாளர்களிடமிருந்து எந்த ஒரு பணப் பிடித்தமும் செய்யாமல் இலவசமாகவே வழங்குகிறது. இந்த G Pay இல் நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் இணைத்துக்கொள்ள முடியும். ஆனால் ஏதாவது ஒரு வங்கி கணக்கை மட்டும் தான் முதன்மை கணக்காக (Primary Account ) பயன்படுத்த இயலும். இது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பணம் மாற்றம் செய்வது மட்டும் அல்ல  உங்களின் ஒரு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மற்றொரு வங்கி கணக்கிற்கும்  மாற்றம்  செய்ய முடியும். இதனை Self Transfer என்பர்.எவ்வாறு மாற்றலாம் என்பதை பார்க்கலாம்.
  • மொபைலில்  Google Pay செயலியை ஓபன் செய்து கொள்க.
  • இப்போது Self Transfer என்ற option னைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து நீங்கள் எந்த வங்கியில் இருந்து எந்த வங்கிக்கு பணம் மாற்ற வேண்டுமோ அந்த வங்கிகளை select செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்து கொள்க.
  • இப்போது நீங்கள் எவ்வளவு தொகை மாற்ற வேண்டுமோ அதன் இலக்கங்களை enter செய்து Pay என்ற பட்டனைக் கிளிக் செய்தால் உங்களது Self Transfer வெற்றிகரமாக மாறிவிடும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..


No comments:

Post a Comment