ஆதார் அட்டை என்பது தனி மனித அடையாள ஆவணமாக பயன்படுகிறது. சமீபத்தில் UIDAI தரப்பில் மக்கள் தங்களது ஆதார் அட்டையில் கடந்த பத்து வருடங்களாக எந்தவொரு Update ம் செய்யாமல் இருப்பவர்கள் 2024 மார்ச் 14 ற்குள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது இந்த அவகாசத்தை ஜூன் 14 வரை நீடித்துள்ளது. அதற்குள் புதுப்பிக்க தவறினால் அடுத்து புதுப்பிக்கும் ஒவ்வொரு திருத்தத்திற்க்கும் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஒரு மனிதன் ஆதார் அட்டையை குறிப்பிட்ட முறைகள் மட்டுமே புதுப்பிக்க இயலும். அதை பற்றி விரிவாக காண்போம்.
பிறந்த தேதி - ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய இயலும்.
முகவரி - முகவரி மாற்றம் செய்வதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இதன் மூலம் நாம் எந்தனை முறை வேண்டுமானாலும் மாற்றம் செய்து கொள்ளலாம்.
பெயர் - ஆதாரில் பெயரை அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே மாற்ற இயலும்.
பாலினம் - பாலினம் மட்டும் ஒரே ஒரு முறை மட்டும் தான் மாற்றம் செய்ய முடியும்.
புகைப்படம் - ஆதாரில் புகைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ள இயலும்.
No comments:
Post a Comment