தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணம்/விபத்து மரணம் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றது . இதில் முதியோர் உதவித்தொகை பெற பதிவு பெற்ற தொழிலாளி 60 வயதை அடைந்திருக்க வேண்டும்.இவ்வாறு பென்ஷன் வாங்கும் முதியோர் இறந்துவிட்டால் அவர்களுடைய பென்ஷன் தொகையில் பாதி அவர்களது நியமனதாரருக்கு செல்லும்.அந்த பென்ஷன் தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்போம்!
தேவையான ஆவணங்கள்:
- நலவாரிய அட்டை
- ஆதார் அட்டை
- பென்ஷன் ஆர்டர் copy
- இறப்பு சான்றிதழ்
- நியமனதாரர் ஆதார் அட்டை
- நியமனதாரர் வங்கி கணக்கு
- நியமனதாரர் புகைப்படம்
- நியமனதாரர் கையெழுத்து
- வாரிசு சான்றிதழ்
- கீழே உள்ள Family Pension Apply என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- பின் அங்கு கேட்கக்கூடிய தகவல்களை சரியாக நிரப்பி sumbit செய்யவும்.
- உங்களது கோரிக்கை விண்ணப்பம் Approve ஆகிய பின் நியமனதாரருக்கு மாதம் மாதம் பென்ஷன் வழங்கப்படும்.
No comments:
Post a Comment