சாலையில் அதிவேகமாக செல்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கு தான்! | Google Map Speedometer | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, March 1, 2024

சாலையில் அதிவேகமாக செல்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கு தான்! | Google Map Speedometer | Techinfo

சாலைகளில் அதி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டிருப்போம். அவ்வாறு வேகமாக செல்லும் வாகனங்களுக்கு  போக்குவரத்து அதிகாரிகள் இந்திய தண்டனை சட்டப்படி  அபராதம் விதிப்பார்கள். ஒவ்வொரு சாலை பகுதியிலும்  டிரைவிங் செல்லும் போதும்  அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வேகக் கட்டுப்பாடு இருக்கும் நாம் அந்த வேகத்தை விட அதிகமாக செல்லும் போது தான் நாம் வீணாக அபராதம் கட்ட வேண்டியுள்ளது. மேலும் அந்த அதி வேகம் என்பது நமக்கே கூட ஆபத்தை வரவழைக்கலாம். இவற்றை தடுக்கும் பொருட்டு கூகிள் மேப் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது உலகில் உள்ள சாலைகளில் தற்போது என்ன வேக கட்டுப்பாடுகள் (Speedometer) உள்ளன என்பதை இந்த ஆப்பில் பார்க்கலாம்.

  • முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் கூகிள் மேப் செயலியை ஓபன் செய்து கொள்க.
  • அதில் வலது பக்க மூலையில் உள்ள உங்கள்  Profile போட்டோ வைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது Settings option னில் செல்லவும். அதி; Navigation Settings  னைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது Driving Options இல் Speedometer என்ற option னை on செய்யவும். 
  • இப்போது நீங்கள் செல்லக்கூடிய சாலையில் நீங்கள் எந்த வேகத்தில் செல்கிறீர்கள் என்பதை இது  காட்டும் . குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமாக செல்லும் போது கூகிள் மேப்ஸ் உங்களை அலார்ட் செய்யும்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment