மனிதனின் அன்றாட வாழ்வில் மின்சாரம் என்பது பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. வீடுகளில் மின்விசிறி, தொலைக்காட்சி முதல் மொபைல்களுக்கு சார்ஜ் போடுவது வரை எல்லாவற்றிற்கும் மின்சாரம் என்பது மிக அத்தியாவசிய தேவை ஆகிறது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் பிரதிமாதம் மின் கட்டணமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மின் கட்டண அதிகரிப்பை தடுப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஓன்று தான் சூரிய சோலார் Panel . இந்த வகை மூலம் நாம் சூரியனின் நேரடி ஆற்றலிலிருந்து நமது வீட்டில் உள்ள மின்னணு பொருட்களுக்கு மின்சாரத்தை பெற இயலும் .
தற்போது இந்த சூரிய சோலார் Panelகளை மானியத்துடன் மத்திய அரசே பொது மக்களுக்கு வழங்குகிறது. இதன் படி Panelகளின் விலையில் 40 சதவீதம் மானியம் பெற இயலும்.
இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் மின்சார செலவை குறைப்பதே முக்கிய நோக்கமாகும்.
இந்த மானிய சோலார்களைப் பெற நாம் வீட்டிலிருந்தபடியே பதிவு செய்து கொள்ளலாம். அதாவது அஞ்சல் அலுவலகங்களில் உள்ள தபால்காரர்கள் மூலம் பதிவு செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மின் இணைப்பு எண், மின் கட்டண ரசீது போன்ற ஆவணங்களைக் கொண்டு உங்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment