முதியோர் பென்ஷன் தொகைக்கு ஈஸியா Apply பண்ணலாம்! | Old Age Pension Apply in Online ! | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, March 4, 2024

முதியோர் பென்ஷன் தொகைக்கு ஈஸியா Apply பண்ணலாம்! | Old Age Pension Apply in Online ! | Techinfo


வயது மூப்பின் காரணமாக வேலை செய்ய இயலாத  முதியவர்களுக்காக உதவி செய்யும் பொருட்டு அரசு மூலம்  மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதியோர் பென்ஷன் ஆன்லைனில் apply செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்!

தேவையான ஆவணங்கள்:

  1. விண்ணப்பிப்பவரின் புகைப்படம் 
  2. குடும்ப அட்டை 
  3. ஆதார் அட்டை 
  4. வங்கி கணக்கு புத்தகம் 
  • கீழே கொடுக்கப்பட்ட Pension Apply என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • ஏற்கனவே Account வைத்திருப்பவர்கள் User Name, Password கொடுத்து login என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  •  Account இல்லாதவர்கள் புதிதாக  Account create செய்து login செய்து கொள்ளவும்.
  • login செய்து  Revenue Department என்பதை தேர்வு செய்யவும்.
  • அதில் Old Age Pension என்பதை கிளிக் செய்து Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடைய ஆதார் எண்ணை டைப் செய்து Search என்ற பட்டனை கிளிக் செய்யவும். 
  • உங்களுக்கு Can Number இருந்தால் அதை select செய்து Proceed என்ற பட்டனைக் கிளிக் செய்யவும் .
  • Can Number இல்லையென்றால்  மேலே உள்ள Register Can என்ற பட்டனைக் கிளிக் செய்து Can Number  create செய்து கொள்ளவும்.
  • இப்போது கீழே உங்களுடைய பிறந்த தேதியை கொடுத்து Get OTP என்பதை கிளிக் செய்தால்  Can Number register செய்யப்பட மொபைல் எண்ணிற்கு OTP செல்லும்.
  • அந்த OTP யை உள்ளீடு செய்து Proceed என்ற optionனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து   mode of disbursement என்பதில் bank/Postal என்பதை தேர்வு செய்து உங்களது வங்கி விவரங்களை சரியாக டைப் செய்து Submit என்ட்ரிய பட்டனைக் கிளிக் செய்யவும்.
  •  அடுத்து உங்களுடைய Documents Upload option வரும் . அதில் கேட்ககூடிய Documentsயையும் upload செய்ய வேண்டும்.
  • அதில் Self Declaration form மற்றும் Download Aadhaar consent form இரண்டையும் download செய்து கையொப்பம் இட்டு ஸ்கேன் செய்து Upload செய்ய வேண்டும்.
  • அணைத்து Documentsயையும் upload செய்த பின் Make Payment என்ற பட்டனை கிளிக் செய்து UPI , Net Banking , அல்லது Credit card மூலம் பணத்தை செலுத்த வேண்டும்.
  • இப்போது உங்களுக்கு ஒரு Acknowledgement number வரும் அதை வைத்து நீங்கள் status செக் செய்துகொள்ளலாம்.
  • உங்களுடைய விண்ணப்பம் Approval ஆகிவிட்டால் அடுத்த மாதம் முதல் உங்களுக்கு பென்ஷன் தொகை ஏறிவிடும் .

Pension Apply

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment