உங்களுடைய UAN நம்பரை Activate செய்யணுமா? இப்படி பண்ணுங்க!| Activate UAN Number | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, March 4, 2024

உங்களுடைய UAN நம்பரை Activate செய்யணுமா? இப்படி பண்ணுங்க!| Activate UAN Number | Techinfo


நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் PF பிடித்தம் செய்கிறார்களா?  அங்கு கொடுக்கப்பட்ட UAN நம்பர் என்பது மிகவும் முக்கியமானது.அந்த நம்பர் இருந்தால்தான் PF ல் பிடித்தம் செய்யப்பட தொகையை நாம் பெற முடியும். அவ்வாறு தொகையை பெறும்போது நமக்கு கொடுக்கப்பட்ட UAN நம்பரின் password மறந்துவிட்டதா? Forget password கொடுத்தும்  UAN நம்பர் Activate ஆகவில்லை என வருகிறதா? இப்போதே ஆன்லைனில் உங்களுடைய UAN நம்பரை Activate செய்யலாம்.எவ்வாறு என்பதை பார்க்கலாம்.
  • கீழே கொடுக்கப்பட்ட Activate UAN என்ற link யைக்  கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுடைய UAN நம்பரை டைப் செய்து கீழே ஆதார் எண்ணையும் பெயர் மற்றும் பிறந்த தேதியை ஆதாரில் உள்ளவாறு சரியாக டைப் செய்யவும்.
  • அடுத்து மொபைல் எண்ணில் நீங்கள் PF பிடித்தம் செய்வதற்கு எந்த நம்பர் கொடுத்தீர்களோ அந்த நம்பரையும்  கட்டத்தில் உள்ள Captcha வையும் சரியாக டைப் செய்யவும்.
  • பின் கீழே உள்ள  சின்ன கட்டத்தையும் select செய்துவிட்டு Get Authorization pin என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடைய நம்பருக்கு ஒரு OTP வரும் அதை enter செய்து submit செய்தால் உங்களுடைய UAN நம்பர் Activate ஆகிவிடும்.
  • உடனே உங்களுடைய மொபைல் எண்ணிற்கு SMS மூலம் password அனுப்படும். அந்த password டை வைத்து மீண்டும் login செய்து உங்களுடைய passwordடை  மாற்றிகொள்ளலாம்.மேலும் அதை வைத்து PF தொகையை பெற விண்ணபிக்கலாம்.

Activate UAN

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..


No comments:

Post a Comment