ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமுகன் என்பதற்கு அடையாளமாக உள்ளது. வங்கி கணக்கு முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது, வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசிய ஆவணமாக உள்ளது. இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்று பால் ஆதார் அல்லது நீல ஆதார் 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது. இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகளில் குழந்தைகளை சேர்ப்பது எளிதாகிறது. .
பால் ஆதார்
- இந்த பால் ஆதார் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வழங்கப்படுகிறது.
- இந்த பால் ஆதாரில் குழந்தைகளின் பயோ மெட்ரிக் தரவுகளை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஐந்து மற்றும் பதினைந்து வயதில் அவர்களின் கருவிழி, விரல்,முகத்தை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள் குறிப்பிட வயதை அடைந்தவுடன் அந்த ஆதார் அட்டையின் செல்லுபடி தன்மையை இழக்க நேரிடும். இந்த ஆதார் புதுப்பித்தல் முற்றிலும் இலவசம்.
- இந்த ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது. அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம்.
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சீட்டு ஏதேனும் ஒன்றை வைத்து ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment