நீட் என்பது வருடத்திற்கு ஒரு முறை தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் ஆப்லைலில் நடத்தப்படும் தேசிய அளவிலான இளங்கலை மருத்துவ நுழைவு தேர்வு ஆகும். தற்போது NTA தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் NEET UG 2024 க்கான பதிவை தொடங்கியுள்ளது. இதில் 2023-2024 கல்வி ஆண்டில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் NEET தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது 12 ஆம் வகுப்பிற்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. பொது தேர்வு முடிந்த பின் மார்ச் 25 முதல் மே 2 வரை மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திங்கள் முதல் சனி வரை இந்த வகுப்புகள் நடைபெறும். இயற்பியல் , கணிதம்,வேதியியல்,விலங்கியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வகுப்புகள் தினந்தோறும் காலை 9.15 முதல் மாலை 4.30 வரை நடைபெறும். மாவட்டத்திற்கு 2 பயிற்சி மையங்கள் நடைபெறும் அதில் குறைந்தபட்சம் 40 மாணவர்கள் இடம்பெற வேண்டும். மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு காலை உணவு,மதிய உணவு,தேநீர் போன்றவை வழக்கப்படும் எனவும் பள்ளிகல்வி துறை சார்பில் அறிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment