பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றன. குறிப்பாக மாணவர்களின் கல்வி கற்றலை ஊக்குவிக்கும் விதமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவற்றை பெறுவதற்கு வங்கி கணக்கு என்பது மிக முக்கியமானதாகும். இதனால் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படா வண்ணம் தமிழக அரசே 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம் என கல்வி மேலாண்மை தகவல் முறைமை துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசிய சான்றிதழ்களான வருமானச்சான்றிதழ் , சாதி சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ் , முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ் என நால்வகை சான்றிதழ்களையும் தலைமை ஆசிரியர் வழிகாட்டுதல் படி அணைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளிலே செய்து கொள்ளலாம் எனவும் அவற்றின் விவரங்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஒப்புதல் ஆகிய பின் அந்த தளத்திலேயே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment