PF இன் இருப்பு தொகையை செக் பண்ணனுமா? இத பாருங்க! | PF Balance Check in Mobile | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, March 20, 2024

PF இன் இருப்பு தொகையை செக் பண்ணனுமா? இத பாருங்க! | PF Balance Check in Mobile | Techinfo



பொதுவாக எதோவொரு நிறுவனத்தில் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு EPF திட்டம் மூலம் பிரதி மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை எவ்வளவோ அதே தொகையை அந்த நிறுவனமும் தொழிலாளர்களின் EPF கணக்கில் செலுத்தும். இந்த தொகையை அந்த தொழிலாளி வேலையிலிருந்து ஓய்வு பெரும் போது பெற்றுகொள்வர். ஆனால் சில அவசர தேவைக்காக அந்த பணத்தை இடையிலேயே பெற்று கொள்ளும் வசதியை EPF அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு தொகையை பெரும் முன் உங்களது  EPF கணக்கில் எவ்வளவு இருப்பு தொகை உள்ளது என்பதை மிக எளிமையான நான்கு முறையில் உங்களது மொபைல் எண் மூலமாகவே அறிந்து கொள்ள இயலும். 
  1. மொபைல் SMS மூலமாக அறிந்து கொள்ளுதல் 
  2. மொபைல் Missed Call மூலம் அறிந்து கொள்ளுதல் 
  3. EPF அதிகாரபூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளுதல் 
  4. UMANG App மூலம் அறிந்து கொள்ளுதல் 

1.மொபைல் SMS மூலமாக அறிந்து கொள்ளுதல் 
இந்த  முறை மூலம் EPF பெரும் தொழிலாளரின் மொபைல்  SMS  மூலமாக இருப்பு தொகையை அறிய முடியும். அதற்கு அந்த தொழிலாளி EPF இன் KYC அப்டேட் செய்திருக்க வேண்டும். இப்போது  7738299899 எண்ணிற்கு EPF UAN ENG என்று SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

2.மொபைல் Missed Call மூலம் அறிந்து கொள்ளுதல் 
இந்த  முறை மூலம் EPF பெரும் தொழிலாளரின் மொபைல்  SMS  மூலமாக இருப்பு தொகையை அறிய முடியும். அதற்கு அந்த தொழிலாளி EPF இன் KYC அப்டேட் செய்திருக்க வேண்டும். இப்போது 011-22901406 இந்த எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் மூலம் Missed Call கொடுக்கவும். சில வினாடிகளில் அழைப்பு துண்டிக்கப்பட்டு குறுஞ்செய்தி மூலம் இருப்பு தொகையை அறிய இயலும்.

3.EPF அதிகாரபூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளுதல் 
இந்த முறை மூலம் நீங்கள்EPFஇன்  https://www.epfindia.gov.in/site_en/index.php 
இந்த website இல் சென்று Employee என்ற option னைக்  கிளிக் செய்து உங்கள்  UAN நம்பர் மற்றும்  கடவுச்சொல்லை கொடுத்து உங்கள் இருப்பு தொகையை அறிய இயலும்.

4.UMANG App மூலம் அறிந்து கொள்ளுதல் 
இந்த முறை மூலம் UMANG என்ற செயலியில் உங்களது  UAN எண் கொண்டு இருப்புத் தொகையை அறிய இயலும். 

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..




No comments:

Post a Comment