வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதில் நீங்கள் பழைய கருப்பு வெள்ளை வாக்களர் அட்டை வைத்திருந்தால் உடனடியாக அந்த வாக்களர் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என செக் செய்ய வேண்டும். ஏனெனில் அவ்வாறு கருப்பு வெள்ளை அட்டை வைத்திருக்கும் வாக்களர் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லையெனில் அந்த வாக்களர் எண் செயலில் இருக்காது. அதாவது வரக்கூடிய தேர்தல் வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறாது. எனவே வாக்களர் அட்டையுடன் ஆதார் இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. அவ்வாறு உங்கள் வாக்களர் அட்டை ஆதாருடன் இணைக்கப்படவில்லை எனில் நீங்கள் மீண்டும் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதை எவ்வாறு செக் செய்வது என்பதைப் பற்றிக் காண்போம்.
- கீழே உள்ள " Check Voter " என்ற link யைக் கிளிக் செய்து உங்கள் பயனாளர் பெயர், கடவுச்சொல் மற்றும் captcha வைக் கொடுத்து login செய்து கொள்ளவும்.
- இப்போது Fill Form 6B என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் பழைய வாக்களர் அட்டை எண்ணை கொடுத்து submit செய்யவும்.
- இப்போது நீங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால் Aadhaar already Linked என்று வரும். வரவில்லை எனில் உங்கள் ஆதாருடன் வாக்களர் எண் இணைக்கப்படவில்லை நீங்கள் மீண்டும் புதிதாக விண்ணபிக்க வேண்டும்.
No comments:
Post a Comment