ரேஷன் அட்டைதாரர் இனி கடைக்குச் செல்ல வேண்டியதில்லை ! | RationShop Helpline Numbers | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, March 22, 2024

ரேஷன் அட்டைதாரர் இனி கடைக்குச் செல்ல வேண்டியதில்லை ! | RationShop Helpline Numbers | Techinfo


அரசு அனைத்து மக்களுக்கும் இலவச அரிசி மற்றும் குறைந்த விலையில் கோதுமை,சீனி,பருப்பு,ஆயில் போன்ற ரேஷன் பொருட்களை நியாயவிலைக் கடை மூலம்  வழங்குகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் மாதம் ஒரு முறை அந்ததந்த ஊர்களில் உள்ள நியாய விலை கடை மூலம் விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு நாம் பெரும் பொருட்கள் கடைகளில் இருப்பு  விவரங்கள் மேலும் கடை திறந்துள்ளதா? மூடப்பட்டு உள்ளதா? என்பதை இருந்த இடத்தில் இருந்தே மொபைல் மூலமாக எளிதாக அறிந்து கொள்ள  இயலும். எவ்வாறு என்பதை பார்ப்போம்! 

  • உங்கள் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் இருப்பில் உள்ள பொருட்களின் விவரங்கள் பற்றி அறிய 9773904050 என்ற எண்ணிற்கு உங்கள் குடும்ப அட்டையுடன் பதிவு செய்யப் பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS <SPACE> 101 என டைப் செய்து SMS அனுப்பினால் உடனே பொருட்கள் பற்றிய விவரங்கள் உங்கள் மொபைலுக்கே அனுப்பப்படும்.
  • நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு கடை திறந்துள்ளதா என்பதை அறிய 9773904050 என்ற எண்ணிற்கு PDS <SPACE> 102 என டைப் செய்து SMS அனுப்பவும்.
  • மேலும் நீங்கள் வாங்கக் கூடிய ரேஷன் பொருட்கள் அதிக விலையில் விற்றால் அவற்றை புகார் செய்வதற்கு மேலே குறிப்பிட்ட அதே எண்ணிற்கு ( 9773904050) PDS <SPACE> 107 என டைப் செய்து உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment