பல்வேறு இணையதள உலாவிகள் இருக்கும் போதும் பெரும்பான்மையான மக்கள் கூகிள் குரோம் உலாவியைத் தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் CERT நாம் பயன்படுத்தும் கூகிள் குரோமின் டெஸ்கிடாப் version னில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்துள்ளது . இதன் மூலம் நம்முடைய தரவுகளுக்கு ஆபத்து வரலாம் என பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
இதனை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றி காண்போம்!
தற்போது கூகிள் நிறுவனம் கூகிள் குரோமை அப்டேட் செய்துள்ளதாகவும் அவற்றில் இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டது எனவும் தெரிவித்து இருந்தது. இப்போது அப்டேட் செய்யப்பட்ட version னை பயன்படுத்தினால் இந்த ஆபத்தில் இருந்து தப்பலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்போது அதனை எவ்வாறு அப்டேட் செய்வது என்பதை பாப்போம்.
- முதலில் உங்கள் கூகிள் குரோமை ஓபன் செய்து கொள்க.
- பின் வலது பக்க மூலையில் மூன்று புள்ளிகளை கிளிக் செய்க.
- இப்போது கீழே உள்ள Help என்ற option னைக் கிளிக் செய்தால் அதில் About Google Chrome என்பதை கிளிக் செய்தால் போதும். கூகிள் குரோமின் latest version அப்டேட் ஆகி விடும்.
- பின் நீங்கள் இதை டவுன்லோட் செய்து use செய்து கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment