மகப்பேறு உதவித்தொகை ரூ.18000 இனிஆன்லைனில் apply செய்துக்கலாம் ! அரசின் அதிரடி அறிவிப்பு | Muthulakshmi Reddi Maternity Claim online Apply | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, April 23, 2024

மகப்பேறு உதவித்தொகை ரூ.18000 இனிஆன்லைனில் apply செய்துக்கலாம் ! அரசின் அதிரடி அறிவிப்பு | Muthulakshmi Reddi Maternity Claim online Apply | Techinfo


டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவாக கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18000 மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு கரு தரித்த 12 வாரங்களுக்குள் ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியரிடம் தங்களுடைய பெயரை பதிவு செய்த பின்  "பிக்மி" எண்  வழங்கப்படும் அப்போதே அவர்களது வங்கியில் ரூ.2000 வரவு வைக்கப்படும்.பின் 4 வது மாதத்தில் ரூ.2000 மும் ரூ.2000 மதிப்புள்ள மகபேறு கால kit உம் அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பின் ரூ.4000 மும் குழந்தைக்கு 9 வது மாத முடிந்த பின்னர் ரூ.2000 மும் என 18000 ரூபாயும் ஒரு தவணையாக இல்லாமல் 5 தவணைகளில் வழங்கப்பட்டது. கடந்த 2 வருடங்களாக இந்த டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை சரிவர வழங்கப்படவில்லை  என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் இந்த மாதம் ஏப்ரல் 1 லிருந்து அரசு வழங்ககூடிய 14000+4000 தொகையானது 3 தவணைகளில்  வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது அதாவது கரு தரித்த 4 வது மாதத்தில் ரூ.4000 மும் குழந்தை பிறந்த 4 வது மாதத்தில் ரூ.6000 மும் 9 வது மாதம் நிறைவடைந்த பின் ரூ.2000 மும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

தற்போது  இந்த திட்டத்திற்கு நீங்கள் செவிலியரை சென்று பார்க்க வேண்டாம். வீட்டில் இருந்தவாறே கர்ப்பிணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்காகத்தான் அரசு புதிதாக இணையதளம் ஒன்றை உருவாகியுள்ளது. கீழே உள்ள  Picme Registration என்ற link யைக் கிளிக் செய்து  அதில் கேட்கக்கூடிய விவரங்களை பூர்த்தி செய்தும் ஆவணங்களை upload செய்தும் RCH எண்ணைப் பெறலாம்! 

Picme Registration


இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....

No comments:

Post a Comment