ஒருவர் தன்னுடைய மொபைலில் எத்தனை மெயில் ஐடிகள் வேண்டுமானாலும் உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கென்று தனிப்பட்ட முறையில் ஒன்று, அலுவலக பயன்பாட்டிற்கு ஒன்று, பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு பயன்படுத்துவதற்கு ஓன்று என ஏகப்பட்ட மெயில் ஐடிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பல மெயில் ஐடிகளை எவ்வாறு add செய்து பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்!
- முதலில் உங்கள் மொபைலில் Gmail app யை ஓபன் செய்து கொள்ளவும்.
- உங்களிடம் மெயில் ஐடி அக்கௌன்ட் இல்லையென்றால் புதிதாக ஒரு கணக்கை துவங்கி கொள்ளவும்.
- ஏற்கனவே மெயில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்கள் உங்கள் மெயிலை ஓபன் செய்ததும் வலது பக்க மூலையில் உள்ள மெயில் profile னைக் கிளிக் செய்யவும்.
- அதில் கீழே Add Another Account என்ற option இருக்கும்.அதை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் firstname,lastname,username,password கொடுத்து உங்கள் மொபைல் எண்ணை enter செய்து Verification Code யை டைப் செய்து verify பட்டனைக் கிளிக் செய்து Terms&Condition னை Accept செய்தால் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் மெயில் ஐடியுடன் இப்போது புதிதாக create செய்த மெயில் ஐடியும் add ஆகி விடும்.
- இப்போது நீங்கள் எந்த மெயிலை ஓபன் செய்து பார்க்க வேண்டுமோ அதே போல் வலது பக்க மூலையில் உள்ள profile icon னை டச் செய்து மெயில் அக்கௌன்ட்டை மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....
No comments:
Post a Comment