RTE எனப்படும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை இலவசமாக படித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய / தாழ்த்தப்பட்ட / வாய்ப்பு மறுக்கப்பட்ட குடும்ப பின்னணியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு மூலம் அறிவுறுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் கல்வி செலவினை அரசே ஏற்கும். தற்போது 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான RTE யின் மூலம் தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இலவசமாக படித்திட ஏப்ரல் 20 முதல் மே 20 வரை ஆன்லைன் மூலமாகவே விண்ணபிக்கலாம் என அரசு தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் நீங்களோ? அல்லது உங்கள் குழந்தைகளை இலவசமாக தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க விருப்பமா? அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பற்றி பார்ப்போம்!
தகுதிகள்
- தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது.
- 1 ஆம் வகுப்பில் சேர்வதற்கு விண்ணபிக்க குழந்தையின் பிறந்த தேதி 31/ஜூலை/2015 முதல் 31/ஜூலை/2018 வரையில் இருக்க வேண்டும்.
- LKG யில் சேர விண்ணபிக்க குழந்தையின் பிறந்த தேதி 31/ஜூலை/2017 முதல் 31/ஜூலை/2018 வரை இருக்க வேண்டும்.
- இச்சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர்,பிற்படுத்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர் சிறப்பு பிரிவினர் விண்ணபிக்கலாம்.
- ஊனமுற்ற குழந்தைகள்,துப்புரவு பணியாளர்கள,எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- BC,MBC,ST,SC,SC-அருந்ததியர்,OC,DNC,வெளியிடப்படாத சமூக பிரிவைச் சார்ந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேவையான ஆவணங்கள்
- குழந்தையின் ஆதார்
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
- குழந்தையின் புகைப்படம்
- குழந்தையின் சாதிச் சான்றிதழ்
- குடும்ப அட்டை
- பெற்றோர்களின் ஆதார்
- நலிந்த பிரிவினற்கான வருமானச் சான்றிதழ்
- ஊனமுற்றவராக இருந்தால் அதற்கான சான்றிதழ்
- கீழே உள்ள Free Addmission link யைக் கிளிக் செய்து உள் செல்க.
- ஓபன் ஆகும் பக்கத்தில் Start Application என்பதை தேர்வு செய்க.
- அடுத்து மாணவர்களின் விவரம்,பெற்றோர்களின் விவரம் மற்றும் முகவரி சார்ந்த விவரங்களை சரியாக கொடுக்கவும்.
- பின் நீங்கள்/உங்கள் குழந்தைகள் படிக்க விரும்பும் பள்ளியினை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் மேலே கூறப்பட்ட ஆவணங்களை ஒவ்வொன்றாக சரியாக பதிவேற்றம் செய்யவும்.
- பள்ளியை தேர்வு செய்யும் போது மாணவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து பள்ளிக்கூடம் 1 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருத்தல் அவசியம்.
- விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்த பின் Sumbit என்ற பட்டனைக் கிளிக் செய்ததும் உங்கள் கைப்பேசி எண்ணிற்கு SMS வரும்.
No comments:
Post a Comment